search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய எல்லைக்குள் ஊடுருவும் தீவிரவாதிகளை அடக்குங்கள்: நவாஸ் செரீப்பிடம் அமெரிக்கா கண்டிப்பு
    X

    இந்திய எல்லைக்குள் ஊடுருவும் தீவிரவாதிகளை அடக்குங்கள்: நவாஸ் செரீப்பிடம் அமெரிக்கா கண்டிப்பு

    இந்திய எல்லைக்குள் ஊடுருவும் தீவிரவாதிகளை அடக்கும்படி நவாஸ் செரீப்பிடம் அமெரிக்கா கண்டிப்புடன் தெரிவித்துள்ளது.
    நியூயார்க்:

    இந்திய எல்லைக்குள் ஊடுருவும் தீவிரவாதிகளை அடக்கும்படி நவாஸ் செரீப்பிடம் அமெரிக்கா கண்டிப்புடன் தெரிவித்துள்ளது.

    ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப் நியூயார்க்கில் அந்நாட்டு வெளியுறவு மந்திரி ஜான் கெர்ரியை சந்தித்தார்.

    அப்போது காஷ்மீரில் மனித உரிமைகள் மீறல்கள் நடைபெறுகிறது. எனவே காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்கா முக்கிய பங்காற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.

    அதை தொடர்ந்து அமெரிக்க அரசின் துணை செய்தி தொடர்பாளர் மார்க்டோனர் நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தீவிரவாத குழுக்கள் மீது பாகிஸ்தான் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவுக்குள் ஊடுருவும் தீவிரவாதிகளை அடக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது என்றார்.

    பாகிஸ்தானின் பொருளாதார சீரமைப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டது. அதே நேரத்தில் பாதுகாப்பு விவகாரம் முககியமானதாக கருதப்படுகிறது. பாகிஸ்தானிலும், இந்திய எல்லையிலும் தீவிரவாத அச்சுறுத்தல் உள்ளது.

    அமெரிக்கா-பாகிஸ்தான் இடையே மிக தெளிவான வெளிப்படையான நட்புறவு உள்ளது. நவாஸ் செரீப்-ஜான் கெர்ரி இடையேயான சந்திப்பின் போது பல வி‌ஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதில் பிராந்தியங்களுக்கு இடையேயான பிரச்சினைகளும் பேசப்பட்டன.

    இதே போன்று இங்கிலாந்து பிரதமர் தெரசா மேலையும் நவாஸ் செரீப் சந்தித்தார். காஷ்மீரில் மக்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்துவதை நிறுத்தும்படி வலியுறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

    Next Story
    ×