search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தெற்கு ஜப்பானை சூறையாடிய மலாக்காஸ் புயல் டோக்கியோ நகரை நோக்கி விரைகிறது
    X

    தெற்கு ஜப்பானை சூறையாடிய மலாக்காஸ் புயல் டோக்கியோ நகரை நோக்கி விரைகிறது

    மணிக்கு சுமார் 200 கிலோமீட்டர் வேகத்தில் ஜப்பான் நாட்டின் தென்பகுதியை சூறையாடிய மலாக்காஸ் புயல், பசிபிக் பெருங்கடல் வழியாக தலைநகர் டோக்கியோவை நோக்கி விரைந்து கொண்டுள்ளது.
    டோக்கியோ:

    மணிக்கு சுமார் 200 கிலோமீட்டர் வேகத்தில் ஜப்பான் நாட்டின் தென்பகுதியை சூறையாடிய மலாக்காஸ் புயல், பசிபிக் பெருங்கடல் வழியாக தலைநகர் டோக்கியோவை நோக்கி விரைந்து கொண்டுள்ளது.

    ஜப்பான் நாட்டின் தென்பகுதியில் உள்ள மாகாணங்களை இன்று சக்திவாய்ந்த மலாக்காஸ் புயல் கடுமையாக தாக்கியது. மணிக்கு சுமார் 200 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய இந்த புயலின் விளைவாக குமாமாட்டோ உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் வசிக்கும் சுமார் ஆறு லட்சம் மக்கள் தங்களது வசிப்பிடத்தைவிட்டு, பாதுகாப்பான பகுதிகளில் சென்று தங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இப்பகுதியில் தொடர்ந்து பெய்த மழையால் பல பகுதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    இந்த புயலின் எதிரொலியாக கியூஷூ விமான நிலையத்தில் இருந்து இயக்கப்படும் நூற்றுக்கும் அதிகமான விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. தென்பகுதியில் கரையை கடந்த இந்தப் புயல் சற்று வீரியம் தணிந்து ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் உள்ள பசிபிக் பெருங்கடல் வழியாக தலைநகர் டோக்கியோவை நோக்கி விரைந்து கொண்டுள்ளது.

    நாளை காலை 9 மணியளவில் டோக்கியோ நகரின் அருகே கரையை கடக்கும் இந்த புயலின் எதிரொலியாக பலத்த மழை பெய்யும். கடலில் பேரலைகள் எழும்பும். இதன் விளைவாக வெள்ளம், நிலச்சரிவு போன்றவை ஏற்படலாம் என ஜப்பான் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    Next Story
    ×