search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்காவில் விமான விபத்து: ராணுவ வீரர் உள்பட 2 பேர் உயிரிழப்பு
    X

    அமெரிக்காவில் விமான விபத்து: ராணுவ வீரர் உள்பட 2 பேர் உயிரிழப்பு

    அமெரிக்காவின் ஓக்லஹோமா மாநிலத்தில் நிகழ்ந்த விமான விபத்தில் ராணுவ வீரர் உள்ளிட்ட 2 பேர் உயிரிழந்தனர்.
    எனிட்:

    அமெரிக்காவின் ஓக்லஹோமா மாநிலம், எனிட் நகரின் அருகே, நேற்று இரண்டு இறக்கை கொண்ட சிறியரக ராணுவ விமானம் விபத்துக்குள்ளானது. எனிட் நகரில் இருந்து 5 கி.மீ. தொலைவில் இந்த விபத்து நடந்துள்ளது. இதுபற்றி தகவல் அறிந்த மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    இந்த விபத்தில் அந்த விமானத்தில் பயணம் செய்த ராணுவ வீரரும், பொதுமக்களில் ஒருவரும் பலியானதாக வான்ஸ் விமானப்படை தள தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், விசாரணை நடைபெற்று வருவதால் இறந்தவரின் பெயர் விவரத்தை வெளியிடவில்லை.

    மத்திய விமானபோக்குவரத்து நிர்வாக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். மேலும்,  நெடுஞ்சாலை ரோந்து பிரிவு போலீசார் உதவியுடன் விசாரணை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×