iFLICKS தொடர்புக்கு: 8754422764

அமெரிக்காவின் அண்டை நாடான மெக்சிகோவில் சமீபத்தில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 300-ஐ கடந்துள்ள நிலையில் அங்கு இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

செப்டம்பர் 24, 2017 16:31

ஜெர்மனி பொதுத்தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது - மெர்கலுக்கே வெற்றி வாய்ப்பு என தகவல்

ஜெர்மனியின் சான்சலரை (அரசுத் தலைவர்) தேர்வு செய்வற்கான பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று தொடங்கியுள்ளது. இதில், தற்போதைய சான்சலர் மெர்கலுக்கே வெற்றி வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

செப்டம்பர் 24, 2017 13:56

வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை கொல்ல நடந்த சதி முறியடிப்பு

வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை பாதுகாவலர்கள் மூலம் கொல்ல நடந்த சதி முறியடிக்கப்பட்டுள்ளது. அவர் பதவியேற்ற அன்றில் இருந்து அவரை கொல்ல 11 தடவை சதி நடந்துள்ளது.

செப்டம்பர் 24, 2017 11:28

டிரம்ப் மகள் போன்று மாற முகம் மாற்று ஆபரேஷன்: அமெரிக்க பெண்கள் ஆர்வம்

அமெரிக்க் அதிபர் டொனால்டு டிரம்ப் மகள் இவாங்கா போன்று மாற முகம் மாற்று ஆபரேஷனுக்கு பெண்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

செப்டம்பர் 24, 2017 11:27

உலகில் முதன் முறையாக பல் அறுவை சிகிச்சை செய்த சீன ரோபோ

உலகில் முதன் முறையாக சீன ரோபோ பல் அறுவை சிகிச்சை செய்து புதிய பற்களை பொருத்தி சாதனை படைத்துள்ளது.

செப்டம்பர் 24, 2017 10:53

தொழிலாளர் சட்டத்தில் சீர்திருத்தம்: பிரான்ஸ் அதிபருக்கு வலுக்கும் எதிர்ப்பு

பிரான்ஸ் அதிபர் மேக்ரானின் புதிய தொழிலாளர் சீர்திருத்தங்களை எதிர்த்து இடதுசாரி கட்சிகள் தொடர் போராட்டம் நடத்தி வருவதால் அதிபருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

செப்டம்பர் 24, 2017 07:35

லண்டன் மாலில் ஆசிட் தாக்குதல்: 6 பேர் காயம்

லண்டனின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள மாலில் மர்ம ஆசாமிகள் நடத்திய ஆசிட் தாக்குதலில் 6 பேர் காயம் அடைந்தனர்.

செப்டம்பர் 24, 2017 05:49

தமிழ் ஈழ தேசம் அமைக்க மனித உரிமைகள் கவுன்சிலின் உறுப்பு நாடுகள் முன்வர வேண்டும்: வைகோ பேச்சு

பொது வாக்கெடுப்பின் மூலம் தமிழ் ஈழ தேசம் அமைக்க மனித உரிமைகள் கவுன்சிலின் உறுப்பினர் நாடுகள் முன்வர வேண்டும் என ஜெனீவாவில் வைகோ பேசி உள்ளார்.

செப்டம்பர் 24, 2017 05:28

மழலையர் வகுப்பில் படிக்கிற ‘சிறிய குழந்தைகள்போல டிரம்ப், கிம் ஜாங் அன் சண்டை போடுவதா?’: ரஷியா கேள்வி

டிரம்பும், கிம் ஜாங் அன்னும் தொடர்ந்து மழலையர் வகுப்பில் படிக்கிற சிறிய குழந்தைகள்போல சண்டை போடுவதாக ரஷிய நாட்டின் வெளியுறவு மந்திரி செர்கெய் லாவ்ரோவ் கருத்து தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 24, 2017 05:10

ஈராக்கில் சலாகுதினீல் 200 ஐ.எஸ். தீவிரவாதிகள் கொன்று குவிப்பு

ஈராக்கில் சலாகுதினீல் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கும் ராணுவத்திற்கும் இடையே நிகழ்ந்த தாக்குதலின் முடிவில் 200க்கும் மேற்பட்டோர் கொன்று குவிக்கப்பட்டுள்ளதாக லெப்டினன்ட் ஜெனரல் ஷாகீர் ஜாவ்தத் நேற்று அறிவித்தார்.

செப்டம்பர் 24, 2017 01:06

பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளை உருவாக்கி வருகிறது: ஐ.நா. சபையில் சுஷ்மா பேச்சு

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தில் இந்திய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா ஸ்வராஜ் பேசுகையில், பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளை உருவாக்கி வருகிறது என ஆவேசமாக பேசினார்.

செப்டம்பர் 24, 2017 00:10

அமெரிக்காவின் மிரட்டல்களை மீறி ஏவுகணை சோதனை நடத்திய ஈரான்

அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி புதிய நடுத்தர இலக்கை தாக்கும் ஏவுகணை சோதனையை ஈரான் வெற்றிகரமுடன் நடத்தி முடித்துள்ளது.

செப்டம்பர் 23, 2017 20:47

சர்வதேச தடை எதிரொலி: வடகொரியாவில் பெட்ரோல்,டீசல் விலை கிடுகிடு உயர்வு

சர்வதேச நாடுகள் விதித்த பொருளாதார தடை காரணமாக வடகொரியாவில் பெட்ரோல் விலை கிடுகிடுவென 20 சதவீதம் உயர்ந்துள்ளது.

செப்டம்பர் 23, 2017 20:09

மியான்மர் கலவர பகுதியில் குண்டுவெடிப்பு- தீவைப்பு 20 வீடுகள் எரிந்தன

மியான்மரில் கலவரங்கள் நடந்துவரும் ராக்கின் மாகாணத்தில் நேற்றிரவு மீண்டும் வீடுகளுக்கு 20 வீடுகளுக்கு தீவைக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 23, 2017 19:55

நியூசிலாந்தில் தொங்கு பாராளுமன்றம்: தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை

நியூசிலாந்து நாட்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காததால், தொங்கு பாராளுமன்றம் அமைய உள்ளது.

செப்டம்பர் 23, 2017 19:17

மெக்சிகோவில் மீண்டும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.8 புள்ளிகளாக பதிவு

மெக்ஸிகோ நாட்டில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவானதாக கூறப்பட்டுள்ளது.

செப்டம்பர் 23, 2017 19:13

லண்டன் மருத்துவமனையில் இருந்து நவாஸ் ஷெரீப் மனைவி டிஸ்சார்ஜ்

புற்றுநோய் சிகிச்சைக்காக லண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் மனைவி குல்சூம் நவாஸ் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

செப்டம்பர் 23, 2017 18:23

வடகொரியாவில் 3.4 ரிகடர் அளவில் நிலநடுக்கம் - அணுஆயுத சோதனையால் ஏற்பட்டிருக்கலாம் என தகவல்

வடகொரியாவில் இன்று, 3.4 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கம் அணுஆயுத சோதனையின் காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என சீனா நில ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 23, 2017 16:23

கப்பல் எதிர்ப்பு ஏவுகணை சோதனை வெற்றி - பாகிஸ்தான் ராணுவம் பெருமிதம்

பாகிஸ்தானின் வடக்கு அரேபிய கடல் பகுதியில் நடத்தப்பட்ட கப்பல் எதிர்ப்பு ஏவுகணை சோதனை வெற்றியடைந்ததாக அந்நாட்டு ராணுவம் செய்தி வெளியிட்டுள்ளது.

செப்டம்பர் 23, 2017 15:22

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் சூப்பர் மலேரியா நோய் பரவுகிறது: விஞ்ஞானிகள் எச்சரிக்கை

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ‘சூப்பர் மலேரியா’ நோய் வேகமாக பரவி வருகிறது. அது சர்வதேச நாடுகளையும் ஆக்ரமிக்கும் அபாயம் உள்ளது என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

செப்டம்பர் 23, 2017 15:02

5

ஆசிரியரின் தேர்வுகள்...