search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையில் இருந்து கேரளாவுக்கு காரில் ரூ.13 லட்சம் கஞ்சா கடத்தல்
    X

    சென்னையில் இருந்து கேரளாவுக்கு காரில் ரூ.13 லட்சம் கஞ்சா கடத்தல்

    சென்னையில் இருந்து கேரளாவுக்கு காரில் ரூ.13 லட்சம் கஞ்சா கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் பாலக்காடு மதுவிலக்கு உதவி அதிகாரி ஜெயன் மற்றும் ரதீஷ், ரஜனீஸ் ஆகியோர் நேற்று வாளையார் சோதனை சாவடியில் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது கோவையில் இருந்த வந்த காரை சோதனை செய்தனர். அப்போது காரின் பின் சீட்டின் இருக்கைக்கு அடியில் 20 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த அதிகாரிகள் காரில் வந்த 2 பேரிடம் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் இடுக்கி மாவட்டம் அடிமாலியை சேர்ந்த அனிஷ் (வயது 29). மற்றும் சனீஷ் என்பது தெரியவந்தது.

    விசாரணையில் அவர்கள் கூறும்போது, பிடிப்பட்ட கஞ்சாவை சென்னையில் இருந்து கோவைக்கு கடத்தி வந்தோம்.பின்னர் அங்கிருந்து கேரளா கடத்த முயன்றோம். சென்னையில் ஒரு கிலோ கஞ்சா ரூ.10 ஆயிரத்திற்கு வாங்கி எர்ணாகுளம் உள்ளிட்ட பகுதியில் ரூ.40 ஆயிரத்திற்கு விற்பனை செய்வோம்.

    கல்லூரி மாணவர் மற்றும் இளைஞர்களுக்கு சில்லரை வியாபாரிகள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது என்று கூறினர். இதனையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.13 லட்சம் ஆகும் என்று போலீசார் கூறினர்.

    Next Story
    ×