search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பழுதடைந்த ரெயில் என்ஜினை சீரமைக்கும் பணி நடைபெற்ற காட்சி.
    X
    பழுதடைந்த ரெயில் என்ஜினை சீரமைக்கும் பணி நடைபெற்ற காட்சி.

    நாகர்கோவில் - கோவை பாசஞ்சர் ரெயில் என்ஜினில் கோளாறு: பயணிகள் அவதி

    தோவாளை அருகே பாலத்தில் சென்றபோது நாகர்கோவில் - கோவை பாசஞ்சர் ரெயில் என்ஜினில் கோளாறு ஏற்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கோட்டார் ரெயில்நிலையத்தில் இருந்து கோவைக்கு இன்று காலை 7.10 மணிக்கு நாகர்கோவில்- கோவை பாசஞ்சர் ரெயில் புறப்பட்டு சென்றது.

    அந்த ரெயில் தோவாளை அருகே திருமலாபுரம் ரெயில்வே பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று ரெயில் என்ஜினில் கோளாறு ஏற்பட்டதால் ரெயில் நடு வழியில் நின்றது.

    உடனடியாக இந்த தகவலை என்ஜின் டிரைவர் நாகர்கோவில் ரெயில்நிலைய அதிகாரிகளுக்கு தெரிவித்தார். இதைதொடர்ந்து நாகர்கோவிலில் இருந்து மாற்று என்ஜின் அனுப்பப்பட்டது.

    அந்த மாற்று என்ஜின் மூலம் நாகர்கோவில் - கோவை பாசஞ்சர் ரெயில் ஆரல்வாய்மொழி ரெயில் நிலையத்திற்கு இழுத்து வரப்பட்டது. பிறகு அந்த ரெயில் என்ஜினை பழுது பார்க்கும் பணி தொடங்கியது. நடுவழியில் ரெயில் என்ஜினியில் கோளாறு ஏற்பட்டதால் அதில் பயணம் செய்த பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள். இந்த ரெயில் என்ஜின் கோளாறு காரணமாக நாகர்கோவிலுக்கு காலை 7.20 மணிக்கு வரும் பெங்களுரூ எக்ஸ்பிரஸ் ரெயில் நெல்லையில் நிறுத்திவைக்கப்பட்டது. சென்னையில் இருந்து காலை 9.10 மணிக்கு நாகர்கோவில் வரும் அனந்த புரி எக்ஸ்பிரஸ் ரெயில் பணகுடி ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.

    காலை 10 மணிக்கு நாகர்கோவில் வரும் நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் ரெயில் வள்ளியூரில் நிறுத்தி வைக்கப்பட்டது. நாகர்கோவில் டவுண் ரெயில் நிலையத்திற்கு காலை 8 மணிக்கு வந்து குஜராத் செல்லும் ஹாபா எக்ஸ்பிரஸ் ரெயில் ஆரல்வாய்மொழியில் நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பிறகு 2 மணி நேரம் தாமதமாக அந்த ரெயில் நாகர்கோவில் வந்து புறப்பட்டு சென்றது. இதனால் அந்த ரெயில்களில் வந்த பயணிகளும் கடும் அவதிக்குள்ளானார்கள்.

    இந்த நிலையில் காலை 10.30 மணி அளவில் ஆரல்வாய்மொழியில் இருந்து மாற்று என்ஜின் மூலம் கோவை பாசஞ்சர் ரெயில் புறப்பட்டுச்சென்றது. அதன்பிறகு ரெயில் போக்குவரத்தும் சீரானது. #Tamilnews
    Next Story
    ×