search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மீண்டும் பணிக்கு திரும்பிய தொழிலாளர்கள்.
    X
    மீண்டும் பணிக்கு திரும்பிய தொழிலாளர்கள்.

    சிவகாசியில் தற்காலிகமாக போராட்டம் ஒத்திவைப்பு: பட்டாசு ஆலைகள் இன்று மீண்டும் திறப்பு

    சிவகாசியில் பட்டாசு தொழிலாளர்கள் போராட்டம் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 870 பட்டாசு ஆலைகளும் இன்று திறக்கப்பட்டன.

    சிவகாசி:

    சுற்றுச்சூழல் விதியில் இருந்து பட்டாசுக்கு விலக்கு அளிக்க வேண்டும், பட்டாசு வெடிக்க தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டாசு தொழிற்சாலை அதிபர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கடந்த டிசம்பர் 26-ந் தேதி இந்த போராட்டம் தொடங்கியது. இதனால் பட்டாசு ஆலை தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பட்டாசு தொழிலுடன் இணைந்த அட்டை பெட்டி தொழிற்சாலைகளும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றன.

    மேலும் பட்டாசு ஆலை அதிபர்களுக்கு ஆதரவாக கடையடைப்பு, மறியல் போன்றவையும் சிவகாசியில் நடைபெற்றன. இருப்பினும் எந்தவித தீர்வும் கிடைக்கவில்லை.

    போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர பட்டாசு உற்பத்தியாளர்களுடன் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆலோசனை நடத்தினர்

    இதற்கிடையில் பட்டாசு தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் மே 7-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. இதனால் பட்டாசு ஆலை உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இந்த சூழலில் தொழிலாளர்கள் நலனை கருத்தில் கொண்டு போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க பட்டாசு ஆலை உரிமையாளர்கள் முடிவு செய்தனர்.

    இதுகுறித்து தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப்வெடி உற்பத்தியாளர் சங்க தலைவர் ஆசைத்தம்பி கூறுகையில், பட்டாசு வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டதாலும், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கேட்டுக் கொண்டதாலும் தற்காலிகமாக போராட்டத்தை நிறுத்தி உள்ளோம். இன்று ஆலைகளை திறந்து பட்டாசு உற்பத்தியை தொடங்கி உள்ளது.

    எங்களது பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண சட்ட ரீதியிலான முயற்சியை தொடர்ந்து மேற்கொள்வோம் என்றார்.

    போராட்டம் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 870 பட்டாசு ஆலைகளும் இன்று திறக்கப்பட்டன. தொழிலாளர்கள் அனைவரும் பணிக்கு சென்றனர். #tamilnews

    Next Story
    ×