search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தக்கலையில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூ. ஆர்ப்பாட்டம்
    X

    தக்கலையில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூ. ஆர்ப்பாட்டம்

    பஸ் கட்டண உயர்வை கண்டித்து தக்கலை தாலுகா அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தக்கலை:

    தமிழக அரசு பஸ் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பஸ் கட்டண உயர்வை கண்டித்து தி.மு.க., பா.ம.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் போராட்டங்கள் நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டு உளளது.

    பஸ் கட்டண உயர்வை கண்டித்து தக்கலை தாலுகா அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட குழு உறுப்பினர் சந்திரகலா தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பஸ் கட்டண உயர்வை கண்டித்து கோ‌ஷம் எழுப்பினர்.

    முன்னாள் வட்டார குழு உறுப்பினர் ஜான்இம்மானுவேல் முன்னிலை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர் சைமன் சைலஸ் தொடக்க உரையாற்றினார். வட்டார செயலாளர் சுஜா ஜாஸ்மின், வட்டார குழு உறுப்பினர் சின்னத்தம்பி, ஓய்வு பெற்ற ஆசிரியர் முரளிதரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். வேலப்பன், பிரசாத், அரங்கநாயகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல மாவட்டம் முழுவதும் 20 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் முடிவு செய்துள்ளனர். #tamilnews 

    Next Story
    ×