search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலூரில் 22-ந்தேதி கவர்னர் ஆய்வு: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
    X

    வேலூரில் 22-ந்தேதி கவர்னர் ஆய்வு: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

    வேலூரில் தூய்மை இந்தியா திட்ட பணிகள் குறித்து நாளை மறுநாள் (22ம் தேதி) காலை தமிழக கவர்னர் பன்வாரிலால் புராகித் ஆய்வு நடத்துகிறார்.

    வேலூர்:

    தமிழக கவர்னர் பன்வாரிலால் புராகித், ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் சென்று தூய்மை பணிகளை ஆய்வு செய்கிறார். அத்துடன் அரசின் திட்டங்கள் குறித்தும் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்துகிறார்.

    ஏற்கனவே நெல்லை, கோவை, சேலம் ஆகிய மாவட்டங்களில் கவர்னர் ஆய்வு பணி மேற்கொண்டுள்ளார்.

    இதைத்தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் தூய்மை பணிகளை ஆய்வு செய்ய கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று (20-ந்தேதி) வருகிறார். 2 நாட்கள் தங்கிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்க உள்ளார்.

    இன்று (20-ந்தேதி) காலை 10 மணிக்கு சென்னை ராஜ் பவனில் இருந்து காரில் புறப்படும் கவர்னர் பகல் 12 மணிக்கு வேலூர் சுற்றுலா மாளிகை வருகிறார். மதிய உணவுக்கு பின்னர் 12.30 மணிக்கு காரில் தர்மபுரி செல்கிறார். அங்கு சில நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அவர் இன்று இரவு தர்மபுரி சுற்றுலா மாளிகையில் தங்குகிறார்.

    நாளை (21-ந்தேதி) காலை தர்மபுரியில் தூய்மை இந்தியா திட்டப்பணிகளை ஆய்வு செய்து விட்டு பிற்பகல் புறப்பட்டு வேலூர் வருகிறார்.

    மாலை 4.30 மணிக்கு ஸ்ரீபுரம் தங்க கோயிலுக்கு செல்கிறார். மாலை 5.45 மணி வரை தங்க கோவிலை சுற்றிப்பார்த்து விட்டு 5.50 மணிக்கு ஸ்ரீபுரத்தில் இருந்து காரில் காட்பாடி சன்பீம் பள்ளிக்கு செல்கிறார்.

    அங்கு மாதா அமிர்தானந்தமயி பங்கேற்றும் பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, மகளிர் குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். பின்னர் இரவு 8 மணிக்கு வேலூர் சுற்றுலா மாளிகை வந்து தங்குகிறார்.

    நாளை மறுநாள் (22ம் தேதி) காலை 10 மணி முதல் 11 மணி வரை வேலூரில் தூய்மை இந்தியா திட்ட பணிகளை கவர்னர் ஆய்வு நடத்துகிறார்.

    11 மணி முதல் 12 மணி வரை சுற்றுலா மாளிகையில் ஓய்வெடுக்கிறார்.

    பின்னர் வேலூரில் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகள் குறித்து கவர்னருக்கு அதிகாரிகள் விளக்குகின்றனர்.

    மாலை 3.45 மணிக்கு வேலூர் கோட்டையில் ஆய்வு நடத்தும் கவர்னர் அங்கிருந்து மாலை 4 மணிக்கு சென்னை புறப்பட்டு செல்கிறார்.

    தமிழக கவர்னர் வேலூர் வருகை முன்னிட்டு டி.ஐ.ஜி. வனிதா தலைமையில் எஸ்.பி. பகலவன் மற்றும் கூடுதல் எஸ்.பி.க்கள் என 350 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

    ஏற்கனவே சில மாவட்டங்களில் கவர்னருக்கு எதிராக கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. 

    இது போன்ற சம்பவங்கள் எதுவும் வேலூரில் நடக்கக்கூடாது என்பதற்காக அரசியல் கட்சியினரை உளவுத்துறை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். #tamilnews

    Next Story
    ×