search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரஜினி மக்கள் மன்ற குழு சுற்றுப்பயணம் இன்று தொடக்கம்
    X

    ரஜினி மக்கள் மன்ற குழு சுற்றுப்பயணம் இன்று தொடக்கம்

    ரஜினி மக்கள் மன்ற குழு சுற்று பயணம் வேலூரில் இன்று தொடங்குகிறது. இதன் மூலம் முதல் கட்டமாக 1 கோடி தொண்டர்களை உறுப்பினர்களாக சேர்க்க ரஜினி இலக்கு நிர்ணயித்துள்ளார்.

    வேலூர்:

    நடிகர் ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ளார். எப்போது சட்டசபை தேர்தல் வந்தாலும் சந்திக்க தயார் எனக் கூறியுள்ளார்.

    இதன் முதல் கட்டமாக ரஜினி தனக்கு மிக, மிக நம்பிக்கையுள்ள சிலரைக் கொண்டு ஒரு குழுவை அமைத்துள்ளார். இந்த குழுவினர் தமிழ்நாட்டில் உள்ள 32 மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து ஒவ்வொரு மாவட்டம் பற்றியும் ரஜினி ஏற்கனவே திரட்டி வைத்துள்ள தகவல்களுக்கு ஏற்ப இந்த குழு செயல்படும்.

    தற்போது தமிழகத்தில் உள்ள சுமார் 60 ஆயிரம் ரஜினி மன்றங்கள் முறையான நிர்வாகிகள் இல்லா மல் உள்ளது. எனவே அந்த ரஜினி மன்றங்களுக்கு புதிய நிர்வாகிகளை இந்த குழு நியமனம் செய்யும். அந்த நிர்வாகிகள் மூலம் ரஜினி மன்றத்துக்கு உறுப்பினர்களை சேர்க்கும் பணியை தீவிரப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    ரஜினி மன்றத்தின் செயல்பாடுகளை தீவிரப்படுத்த 32 மாவட்டங்களையும் 60 மாவட்டங்கள் போல பிரித்து செயல்பட முடிவு செய்துள்ளனர். இதன் மூலம் முதல் கட்டமாக 1 கோடி தொண்டர்களை உறுப்பினர்களாக சேர்க்க ரஜினி இலக்கு நிர்ணயித்துள்ளார்.

    ரஜினியின் இந்த வியூகத்தை அவரது பிரத்யேகக் குழு வேலூர் மாவட்டத்தில் இருந்து இன்று தொடங்குகிறது. வேலூர் காட்பாடி மெயின் ரோட்டில் உள்ள பென்ஸ்பார்க் ஓட்டலில் இன்று மாலை 4.30 மணிக்கு இந்த குழுவினர் ரசிகர்களுடன் ஆலோசனை நடத்துகின்றனர்.

    இந்த குழுவில் ரஜினி மக்கள் மன்றத்தின் தலைவர்கள் 10 பேர் இடம் பெற்றுள்ளனர். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை வேலூர் மாவட்ட தலைவர் சோளிங்கர் என்.ரவி செய்துள்ளார்.

    வேலூர் மாவட்டத்தில் 13 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. ஒவ்வொரு தொகுதியிலும் எவ்வளவு உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்பது குறித்து இலக்கு நிர்ணயிக்கபடுகிறது. எப்படி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்பது பற்றி விளக்கம் அளிக்கின்றனர்.

    ஒவ்வொரு தொகுதியிலும் 40 ஆயிரம் பேரை இலக்காக கொண்டு வேலூர் மாவட்டம் முழுவதும் 5 லட்சம் பேரை உறுப்பினராக சேர்க்க முடிவு செய்துள்ளனர். #tamilnews

    Next Story
    ×