search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைத்தறி நெசவாளர்கள் ஸ்டிரைக் நீடிப்பு: ரூ. 10 கோடி பட்டு சேலை உற்பத்தி பாதிப்பு
    X

    கைத்தறி நெசவாளர்கள் ஸ்டிரைக் நீடிப்பு: ரூ. 10 கோடி பட்டு சேலை உற்பத்தி பாதிப்பு

    கைத்தறி நெசவாளர்கள் ஸ்டிரைக் நீடித்து வருவதால் கடந்த 4 நாட்களில் சுமார் ரூ. 10 கோடிக்கும் மேல் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.

    பு.புளியம்பட்டி:

    பட்டு நூல் விலை ஏற்றத்தால் கைத்தறி நெசவாளர்கள், பாவு நூல் சாயமிடும் தொழிலாளர்கள், பாவு வீசும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    எனவே மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு பட்டு நூல் விலையேற்றத்துக்கான காரணத்தை கண்டறிந்து விலை குறைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

    இந்த கோரிக்கையை வலியுறுத்தி அவர்கள் ஜனவரி 15-ந் தேதி முதல் 15 நாட்கள் தொடர் வேலை நிறுத்தம் அறிவித்து போராட்டத்தை தொடங்கினர். அவர்களது போராட்டம் இன்று 5-வது நாளாக நீடிக்கிறது.

    ஈரோடு, திருப்பூர், கோவை, நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட கைத்தறி பட்டு, ஜவுளி உற்பத்தியாளர்கள், நெசவு தொழிலாளர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இதனால் ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம், சது முகை, டி.ஜி.புதூர், புஞ்சை புளியம்பட்டி, நால் ரோடு, தொட்டம்பாளையம், அந்தியூர், சாவக்கட்டுபாளையம், நாமக்கல் மாவட்டத்தில் குமாரபாளையம், பள்ளிபாளையம், திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர், காங்கயம், சாவக்கட்டுபாளையம், கோவை மாவட்டத்தில் வாக ராயம்பாளையம், சிறுமுகை, ஆலாங்கொம்பு ஆகிய பகுதிகளில் உள்ள கைத்தறி கூடங்கள் மூடி வெறிச்சோடி கிடக்கின்றன.

    போராட்டம் காரணமாக இங்குள்ள தொழிலாளர்களுக்கு நெசவு செய்ய பாவு, நூல் வழங்கப்படவில்லை. எனவே இங்குள்ள கைத்தறி கூடங்களில் கோரா பட்டு சேலைகள் உற்பத்தி முற்றிலும் முடங்கியது.

    ஈரோடு, கோவை, திருப்பூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் தற்போது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் பணிபுரியும் கைத்தறி கூடங்கள் அனைத்திலும் சேர்த்து தினமும் மொத்தம் ரூ. 2½ கோடி முதல் 3 கோடி வரை கோரா பட்டு சேலைகள் உற்பத்தி நடக்கும்.

    அந்த வகையில் பார்க்கும் போது போராட்டம் நடந்துள்ள கடந்த 4 நாட்களில் சுமார் ரூ. 10 கோடிக்கும் மேல் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. கைத்தறி நெசவு தொழிலாளர்கள் வேலை இன்றி உள்ளனர். #tamilnews

    Next Story
    ×