search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாலிபருடன் கள்ளத்தொடர்பு: 2-வது மனைவியை குத்திக்கொன்ற தொழிலாளி
    X

    வாலிபருடன் கள்ளத்தொடர்பு: 2-வது மனைவியை குத்திக்கொன்ற தொழிலாளி

    நீடாமங்கலத்தில் வாலிபருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதால் 2-வது மனைவியை குத்திக்கொன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள பண்டாரவளை பூவனூர் பகுதியை சேர்ந்தவர் தர்மராஜ் (வயது 39). இவர் முதல் மனைவியிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனியாக வாழ்ந்து வந்தார்.

    இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சுமதி (32) என்ற பெண்ணுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. சுமதி ஏற்கனவே திருமணமானவர் ஆவார்.

    பின்னர் தர்மராஜ் சுமதியை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தரணிதரன் (9) என்ற மகன் உள்ளான். அப்பகுதியில் உள்ள பள்ளி யில் 4-ம் வகுப்பு படித்து வருகிறான்.

    இந்த நிலையில் சுமதிக்கும், ஒரு வாலிபருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. கடந்த ஒராண்டாக 2பேரும் சந்தித்து பேசி பழகி வந்தனர். சுமதியின் கள்ளத் தொடர்பு விவகாரம் தர்மராஜிக்கு தெரிய வந்தது. இதனால் சுமதியை கண்டித்தார். வாலிபருடன் கள்ளத்தொடர்பை கை விடும்படி கூறினார்.

    இதன் காரணமாக அவர்கள் இடை யே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.

    இதையடுத்து தர்மராஜை விட்டு சுமதி நீடாமங்கலம் கோரையாற்றாங்கரை தெருவில் மகனுடன் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் இன்று காலை 7 மணியளவில் சுமதி நீடாமங்கலம் கடைவீதியில் அண்ணாசிலை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த தர்மராஜ், சுமதியிடம் , வாலிபருடன் கள்ளத் தொடர்பை கைவிட்டு தன்னுடன் சேர்ந்து வாழுமாறு கூறினார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது.

    இதனால் ஆத்திரம் அடைந்த தர்மராஜ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சுமதியின் கழுத்தை திடீரென அறுத்தார். இதில் ரத்தம் பீறிட்டு வெளியேறி சம்பவ இடத்திலேயே சுமதி துடி துடித்து பரிதாபமாக இறந்தார்.

    மக்கள் நடமாட்டமுள்ள கடைவீதியில் இந்த கொலை நடந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    சுமதியை கொலை செய்த தர்மராஜை அங்கு நின்ற சிலர் பிடித்து வைத்து, நீடா மங்கலம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதை தொடர்ந்து மன்னார்குடி போலீஸ் டி.எஸ்.பி. அசோகன், நீடா மங்கலம் இன்ஸ்பெக்டர் பழனிசாமி ஆகியோர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    பின்னர் சுமதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மன்னார் குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக தர்மராஜை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews

    Next Story
    ×