search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குட்கா ஊழலில் அமைச்சர் விஜய பாஸ்கருக்கு ரூ.56 லட்சம் லஞ்சம் - வருமான வரித்துறை பதில் மனு
    X

    குட்கா ஊழலில் அமைச்சர் விஜய பாஸ்கருக்கு ரூ.56 லட்சம் லஞ்சம் - வருமான வரித்துறை பதில் மனு

    குட்கா ஊழல் வழக்கில் அமைச்சர் விஜய பாஸ்கர் 56 லட்சம் ரூபாய் லஞ்சமாக பெற்றுள்ளதாக குட்கா நிறுவன உரிமையாளர் மாதவராவ் வாக்குமூலம் அளித்ததாக வருமான வரித்துறை ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் கடந்தாண்டு பரபரப்பை ஏற்படுத்திய குட்கா ஊழல் விவகாரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர், காவல் துறை இயக்குநர் பெயர்கள் அடிபட்டன. குட்கா ஊழல் குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தக்கோரி தி.மு.க சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    இவ்விவகாரத்தில், வருமான வரித்துறை பதில் மனுவை இன்று தாக்கல் செய்துள்ளது. அதில், தடை செய்யப்பட்ட குட்காவை உற்பத்தி செய்ய விஜயபாஸ்கருக்கு 2016 ஏப். 1 முதல் ஜூன் 15 வரை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு ரூ.56 லட்சம் வழங்கப்பட்டுள்ளது என குட்கா உரிமையாளர் மாதவராவ் வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    மேலும், குட்கா விற்பனையை தடுக்க வேண்டும் என டி.ஜி.பி, தலைமை செயலருக்கு வருமான வரித்துறை சார்பில் செப்.,2ல் கடிதம் எழுதப்பட்டது. இந்த கடிதத்தை டி.ஜி.பி, 2016 நவம்பர் 2-ல் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அனுப்பினார். இந்த கடிதம் போயஸ் கார்டன் வேதா இல்லத்தில் உள்ள சசிகலா அறையிலிருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    வருமானவரித் துறையினரின் பதில் மனுவை அடுத்து, வழக்கை வரும் 17-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தலைமை நீதிபதி அமர்வு ஒப்புதல் அளித்தார்.
    Next Story
    ×