search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்சி மாவட்டத்தில் 22 லட்சத்து 1,513 வாக்காளர்கள்
    X

    திருச்சி மாவட்டத்தில் 22 லட்சத்து 1,513 வாக்காளர்கள்

    திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 22 லட்சத்து ஆயிரத்து 513 வாக்காளர்கள் உள்ளனர்.
    திருச்சி:

    திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட 9 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் தொடர்பான 2018-ம் ஆண்டின் சிறப்பு சுருக்க முறை திருத்தம் நடைபெற்றது. 3-10-2017 அன்று இதற்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது 2018-ம் ஆண்டின் சிறப்பு சுருக்க முறை திருத்தப்பணி முடிவடைந்ததை தொடர்ந்து இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதனை திருச்சி மாவட்ட கலெக்டர் கு.ராசாமணி வெளியிட அதனை சப்-கலெக்டர் கமல் கிஷோர் பெற்றுக்கொண் டார்.

    அதன்படி திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 22 லட்சத்து ஆயிரத்து 513 வாக்காளர்கள் உள்ளனர்.

    ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்காளர்கள் எண்ணிக்கை விவரம் வருமாறு:-

    ஆண் வாக்காளர்கள்- 1,31,610. பெண் வாக்காளர்கள்-1,35,342. திருநங்கைகள்-6. மொத்தம்-2,66,958.

    ஆண் வாக்காளர்கள்- 1,40,229. பெண் வாக்காளர்கள்-1,48,654. திருநங்கைகள்-21. மொத்தம்-2,88,904.

    திருச்சி மேற்கு

    ஆண் வாக்காளர்கள்- 1,24,308. பெண் வாக்காளர்கள்-1,32,388. திருநங்கைகள் -12. மொத்தம்-2,56,708.

    திருச்சி கிழக்கு

    ஆண் வாக்காளர்கள்- 1,19,328. பெண் வாக்காளர்கள்-1,25,441. திருநங்கைகள்-37. மொத்தம்-2,44,806.

    ஆண் வாக்காளர்கள்- 1,35,536. பெண் வாக்காளர்கள்-1,38,727. திருநங்கைகள்-50. மொத்தம்-2,74,313.

    ஆண் வாக்காளர்கள்- 1,00,986. பெண் வாக்காளர்கள்-1,06,494. திருநங்கைகள்- 14. மொத்தம்-2,07,494

    ஆண் வாக்காளர்கள்- 1,09,898. பெண் வாக்காளர்கள்-1,15,778. திருநங்கைகள் -28. மொத்தம்-2,25,704.

    ஆண் வாக்காளர்கள்- 1,07,278. பெண் வாக்காளர்கள்- 1,11,839. திருநங்கை கள்-13. மொத்தம்-2,19,130.

    ஆண் வாக்காளர்கள்- 1,05,633. பெண் வாக்காளர்கள்- 1,11,859. திருநங்கைகள்-4. மொத்தம்-2,17,496.

    1.1.2018-ஐ தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு 3.10.17 முதல் 15.12.17 வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் நடைபெற்றது. 8.10.17 அன்று நடைபெற்ற சிறப்பு முகாமின் போது 8516 விண்ணப்பங்களும் 22.10.17 அன்று நடை பெற்ற சிறப்பு முகாமின் போது 11,297 விண்ணப்பங்களும் வரப்பெற்றன. சிறப்பு சுருக்க முறை திருத்த காலத்தில் 55,832 விண்ணப்பங்கள் வரப்பெற்றன. 54,459 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 1,373 விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 18,343 வாக்காளர்கள் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளனர். 26,702 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. வாக்காளர் பட்டியலின்படி திருச்சி மாவட்டத்தில் 10,74,806 ஆண் வாக்காளர்களும், 11,26,522 பெண் வாக்காளர்களும் 185 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 22,01,513 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

    5.1.17 அன்று வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் மொத்தம் 21,97,510 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர். பின்னர் நடைபெற்ற தொடர் திருத்தத்தின் போது 22,540 வாக்காளர் சேர்க்கப்பட்டும், 10,178 வாக்காளர்கள் நீக்கப்பட்டும் 22,09,872 வாக்காளர்களுடன் 3.10.17 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. தற்போது 18,343 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டும், 26,702 வாக்காளர்கள் நீக்கப்பட்டும் 22,01,513 வாக்காளர்களுடன் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதிக வாக்காளர்கள் ஸ்ரீரங்கம் தொகுதியிலும் (2,88,904), குறைவான வாக்காளர்கள் லால்குடி சட்டமன்ற தொகுதியிலும் (2,07,494) உள்ளனர். #TamilNews
    Next Story
    ×