search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கவர்னர் ஆய்வுக்கு எதிர்ப்பு: சேலத்தில் போராட்டம் நடத்திய தி.மு.க. - கூட்டணி கட்சியினர் மீது வழக்கு
    X

    கவர்னர் ஆய்வுக்கு எதிர்ப்பு: சேலத்தில் போராட்டம் நடத்திய தி.மு.க. - கூட்டணி கட்சியினர் மீது வழக்கு

    கவர்னர் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் போராட்டம் நடத்திய தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    சேலம்:

    தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஏற்கனவே கோவை, கன்னியாகுமரி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஆய்வு செய்தார். சேலம் மாவட்டத்தில் நேற்று பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்தார்.

    அப்போது பொது மக்களிடம் குறைகள் கேட்டதுடன் கிராமங்களுக்கும் நேரடியாக சென்று தூய்மை பணிகள் குறித்தும் விளக்கினார். சேலம் மாநகர வளர்ச்சி பணிகள் குறித்து அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தினார்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. பொருளாளர் சுபாஷ் தலைமையில் தி.மு.க.வினர், விடுதலை சிறுத்தை மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சிகளை சேர்ந்தவர்கள் கலெக்டர் அலுவலகம் அருகில் கையில் கருப்பு கொடியுடன் அனுமதியில்லாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோ‌ஷங்களையும் எழுப்பினர்.

    இதையடுத்து சேலம் டவுன் போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க. பொருளாளர் சுபாஷ் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் மீதும் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் அனுமதியில்லாமல் ஒன்றுக்கு மேற்பட்டோர் ஒரே இடத்தில் கூடுதல் (341), சட்ட விரோதமாக தடுத்தல் (143), தடையை மீறி சட்ட விரோதமாக கூடி அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுதல் (188) ஆகிய 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×