search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காட்டுப் பன்றி கடித்து காயமடைந்த நர்சு பேபி அஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் காட்சி
    X
    காட்டுப் பன்றி கடித்து காயமடைந்த நர்சு பேபி அஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் காட்சி

    ஆனைமலை அருகே நர்சை காட்டு பன்றி கடித்தது - ஆஸ்பத்திரியில் சிகிச்சை

    ஆனைமலை அருகே காட்டுப் பன்றி கடித்து கோவை நர்சு படுகாயம் அடைந்தார். அவருக்க பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    ஆனைமலை:

    கோவை மாவட்டம் வால்பாறை காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வம். கூலித் தொழிலாளி. இவரது மனைவி பேபி (31). கோவையில் உள்ள ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வருகிறார்.

    இவர் ஆழியாறில் உள்ள தனது உறவினரை பார்க்க சென்றார். பஸ்சில் இருந்து இறங்கி ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலையம் அருகே நடந்து வந்து கொண்டிருந்தார்.

    அப்போது புதரில் இருந்து வந்த பெரிய காட்டு பன்றி பேபியை கடித்து குதறியது. அவர் சத்தம் போட்டார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பேபியை மீட்டு ஆழியாறு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    ஆழியாறு போலீசார் மற்றும் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.



    Next Story
    ×