search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாலையில் கவிழ்ந்த ஆம்னி பஸ்.
    X
    சாலையில் கவிழ்ந்த ஆம்னி பஸ்.

    கோவை அருகே ஆம்னி பஸ் சாலையில் கவிழ்ந்து விபத்து: 5 பயணிகள் காயம்

    கோவை அருகே இன்று அதிகாலை ஆம்னி பஸ் சாலையில் கவிழ்ந்து விழுந்த விபத்தில் 5 பயணிகள் காயமடைந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    பெங்களூரில் இருந்து கேரள மாநிலம் பத்தினம் திட்டாவுக்கு நேற்று இரவு ஆம்னி பஸ் புறப்பட்டது.

    எர்ணாகுளத்தை சேர்ந்த ஷாஜன்(வயது 34) என்பவர் பஸ்சை ஓட்டினார். பஸ்சில் 34 பயணிகள் இருந்தனர்.

    இன்று அதிகாலை 4.45 மணிக்கு பஸ் கோவை மதுக்கரை அருகே எல் அன்ட் டி பைபாஸ் சாலையில் போடிபாளையம் சந்திப்பு அருகே வந்த போது டிரைவர் திடீரென பிரேக் பிடித்தார்.

    அப்போது எதிர்பாராதவிதமாக பஸ் சாலையின் நடுவே வலதுபுறமாக கவிழ்ந்தது. இதனால் பயணிகள் அலறித் துடித்தனர். சத்தம் கேட்டு அவ்வழியாக வாகனங்களில் சென்றவர்கள் அங்கு விரைந்தனர். அவர்கள் பஸ்சில் இருந்த பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் மதுக்கரை போலீசாரும், நெடுஞ்சாலைத்துறை ரோந்து போலீசாரும் அங்கு விரைந்து சென்றனர். இந்த விபத்தில் 5 பயணிகள் காயமடைந்தனர். சம்பவஇடத் துக்கு ஆம்புலன்சு வரவழைக்கப்பட்டது. காயமடைந்த 3 பேர் சுந்தராபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியிலும், 2 பேர் கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியிலும் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதற்கிடையே பஸ்சில் இருந்து மீட்கப்பட்ட பயணிகள் வேறு பஸ் மூலம் ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் சம்பவஇடத்துக்கு கிரேன் வரவழைக்கப்பட்டு, கவிழ்ந்த பஸ்சை மீட்டனர். இதன்காரணமாக அங்கு சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இன்று அதிகாலை எல் அன்ட் டி பைபாஸ் சாலையில் மழை தூறிக் கொண்டிருந்தது. எனவே டிரைவர் திடீரென பிரேக் பிடித்ததும் பஸ் கவிழ்ந்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

    விபத்து குறித்து மதுக்கரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×