search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரை ஐகோர்ட்டில் 4-வது முறையாக ஜாமீன் கோரி அட்டாக் பாண்டி மனு
    X

    மதுரை ஐகோர்ட்டில் 4-வது முறையாக ஜாமீன் கோரி அட்டாக் பாண்டி மனு

    மதுரை உயர்நீதிமன்ற கிளையில் 4-வது முறையாக ஜாமீன் கோரி அட்டாக் பாண்டி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஜனவரி மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.
    மதுரை:

    தி.மு.க. செயற்குழு உறுப்பினராக இருந்த பொட்டு சுரேஷ் கடந்த 2013-ம் ஆண்டு மதுரையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

    இது குறித்து சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு நபர்களை கைது செய்தனர். இதில் முக்கிய குற்றவாளியாக அட்டாக் பாண்டி சேர்க்கப்பட்டார்.

    ஏற்கனவே அவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்ததால் அட்டாக் பாண்டி தலைமறைவாக இருந்து வந்தார்.

    இந்த நிலையில் 2015-ம் ஆண்டு மும்பையில் பதுங்கி இருந்த அட்டாக் பாண்டியை போலீசார் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்துள்ளனர்.

    அவர் அடிக்கடி, உடல் நிலையை காரணம் காட்டி மதுரை ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டார். ஏற்கனவே 3 முறை தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

    தற்போது 4-வது முறையாக அட்டாக் பாண்டி ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்தார். அதில், நீண்ட நாட்கள் சிறையில் இருந்து வருவதால் உடல்நலக்குறைவு ஏற்படுவதாகவும் ஜாமீனில் அனுமதித்தால் குடும்பத்தினர் உதவியுடன் தனியார் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

    இந்த மனு நீதிபதி தண்டபாணி முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, இந்த மனு குறித்து போலீசார் பதில் அளிக்க உத்தரவிட்டதுடன், வழக்கை ஜனவரி மாதத்துக்கு ஒத்தி வைத்தார்.
    Next Story
    ×