search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாணவர் இம்ரான் முகமது
    X
    மாணவர் இம்ரான் முகமது

    சென்னை மருத்துவக்கல்லூரி மாணவர் தற்கொலை

    சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். 3-ம் ஆண்டு படித்து வந்த மாணவர் தற்கொலைக்கான காரணம் குறித்து நெல்லை டவுண் போலீஸ் இன்ஸ்பெக்டர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நெல்லை:

    நெல்லை டவுன் ஆசாத்ரோடு பகுதியை சேர்ந்தவர் டாக்டர் முகமது அக்பர். இவர் நெல்லை டவுனில் குற்றாலம் ரோட்டில் ஆஸ்பத்திரி வைத்து நடத்தி வந்தார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு டாக்டர் முகமது அக்பர் மரணம் அடைந்து விட்டார். இதனால் அவரது மனைவி டாக்டர் நூப்னா ஆஸ்பத்திரியை கவனித்து வந்தார்.

    இவர்களது மகன் இம்ரான் முகமது (வயது 21). இவர் சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு இம்ரான் முகமது விடுமுறையில் வீட்டுக்கு வந்துள்ளார். அவர் அடிக்கடி மனஅழுத்தம் காரணமாக பாதிக்கப்படுவதால் அவரது தாயார் அதற்கு சிகிச்சை அளித்துள்ளார்.

    இந்த நிலையில் நேற்று இரவு அவரது தாயார் கண் ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்வதற்காக நெல்லை சந்திப்புக்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் தனியாக இருந்த இம்ரான் முகமது தனது படுக்கை அறையில் தூக்குப்போட்டுள்ளார். அப்போது வெளியே சென்று இருந்த அவரது தாயார் டாக்டர் நூப்னா வீட்டுக்கு வந்தார்.

    தூக்கில் தொங்கிய மகனின் அலறல் சத்தம் கேட்டு அவரது அறைக்கு சென்றார். அறை கதவு பூட்டப்பட்டிருந்ததால் சிலரது உதவியுடன் கதவை உடைத்து மகனை மீட்டு நெல்லை சந்திப்பில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று அதிகாலை இம்ரான் முகமது பரிதாபமாக இறந்தார்.

    மாணவர் தற்கொலைக்கான காரணம் குறித்து நெல்லை டவுண் போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பலியான இம்ரான் முகம்மதுக்கு ஆஸ்ரின் என்ற அக்காள் உள்ளார். டாக்டரான அவர் திருமணமாகி வெளிநாட்டில் உள்ளார். சகோதரர் ஒருவர் 8-ம் வகுப்பு படித்து வருகிறான். இம்ரான் முகமது உடலை பார்த்து தாயார் டாக்டர் நூப்னாவும், உறவினர்களும் கதறித்துடித்தனர். 



    Next Story
    ×