search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆர்.கே.நகர் தேர்தல்: எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை
    X

    ஆர்.கே.நகர் தேர்தல்: எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை

    ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கு இன்னும் 7 நாட்களே உள்ளதால் பிரசாரத்தை தீவிரப்படுத்துவது குறித்து முதல்வரும், துணை முதல்வரும் ஆலோசனை நடத்தினர்.

    சென்னை:

    ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 7 நாட்களே உள்ளதால் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.

    இந்த தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். காலை-மாலையில் வீதி வீதியாக சென்று ஓட்டு கேட்கிறார்கள்.

    தேர்தல் பிரசாரத்தில் தி.மு.க. சொல்லி வரும் குற்றச்சாட்டுகளுக்கு தக்க பதிலடியும் கொடுத்து வருகிறார்கள்.

    எடப்பாடி பழனிசாமி நேற்று கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களை சந்திக்க சென்றிருந்ததால் ஆர்.கே. நகர் பிரசாரத்துக்கு செல்ல முடியவில்லை. ஓ.பன்னீர்செல்வமும், அமைச்சர்களும் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

    சென்னை திரும்பிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை 11 மணியளவில் ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்துக்கு சென்றார். அங்கு ஒருங்கிணைப்பாளரான துணை-முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துடன் ஆலோசனை நடத்தினார். இதில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட முக்கிய அமைச்சர்களும், தலைமை கழக நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

    இந்த ஆலோசனை பற்றி தலைமை கழக நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

    தேர்தலுக்கு இன்னும் 7 நாட்களே உள்ளதால் பிரசாரத்தை தீவிரப்படுத்துவது குறித்து முதல்வரும், துணை முதல்வரும் ஆலோசித்தனர்.


    கட்சிக்கு மீண்டும், இரட்டை இலை சின்னம் கிடைத்துள்ளதால் இந்த தேர்தலில் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றே ஆக வேண்டும். ஆர்.கே.நகர் அ.தி.மு.க.வின் கோட்டை என்பதை மீண்டும் நிரூபிக்க வேண்டும். அதற்கு இன்னும் பிரசாரத்தை தீவிரப்படுத்த வேண்டும்.

    பகல் நேரத்தில் கட்சி நிர்வாகிகள் வீடு வீடாக சென்று ஓட்டு கேட்பதை வேகப்படுத்த வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்கள். எந்தெந்த பகுதி சரியில்லையோ அங்கு ஒருமுறைக்கு இருமுறை சென்று ஓட்டு கேட்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

    எனவே பிரசாரத்தை இன்னும் தீவிரப்படுத்த இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×