search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாலைபுதூரில் உள்ள இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியின் வீடு
    X
    சாலைபுதூரில் உள்ள இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியின் வீடு

    கொள்ளையர்களால் சுட்டுக்கொலை: சோகத்தில் மூழ்கிய இன்ஸ்பெக்டரின் கிராமம்

    ராஜஸ்தானில் கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியின் கிராமமான சாலைப்புதூர் சோகத்தில் மூழ்கியது.
    சங்கரன்கோவில்:

    ராஜஸ்தானில் கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியின் சொந்த ஊர் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்த வன்னிக்கோனேந்தல் மூவிருந்தாளி அருகே உள்ள சாலைப்புதூர் கிராமம் ஆகும்.

    இவரது தந்தை செல்வராஜ். தாயார் ராமாத்தாள். பெரும் நிலக்கிழாரான செல்வராஜ் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். பெரியபாண்டியின் மனைவி பானுரேகா. இவர்களுக்கு ரூபன், ராகுல் என்ற 2 மகன்கள் உள்ளனர். பானுரேகா சென்னையில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். ரூபன் கல்லூரியிலும், ராகுல் 9-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

    இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டிக்கு, ஜோசப், அந்தோணிராஜ் என்ற சகோதரர்களும், சுந்தரத்தாய், சீனித்தாய், சகுந்தலா என்ற சகோதரிகளும் உள்ளனர்.


    சோகத்தில் திரண்டு நிற்கும் பெரியபாண்டியின் உறவினர்கள் மற்றும் கிராம மக்களை படத்தில் காணலாம்.

    16.6.1993-ம் ஆண்டு போலீஸ் வேலைக்கு தேர்வான பெரியபாண்டி திருச்சியில் பயிற்சி பெற்றார். அங்கு பயிற்சியை முடித்த அவர் மணிமுத்தாறு பட்டாலியனில் போலீஸ்காரராக பணிக்கு சேர்ந்தார். பின்பு தேர்வு எழுதி சப்- இன்ஸ்பெக்டர் ஆனார். அதன் பிறகு இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்று சென்னையில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் கொள்ளையர்களை பிடிக்க சென்ற இடத்தில் அக்கும்பலால் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி சுட்டுக் கொல்லப்பட்டார்.

    இந்த சம்பவத்தை கேள்விபட்டதும் இன்ஸ்பெக்டரின் சொந்த ஊரான சாலைப்புதூர் கிராமமக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். 
    Next Story
    ×