search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பேராசிரியர் ஜெயராமன்
    X
    பேராசிரியர் ஜெயராமன்

    ஓ.என்.ஜி.சி.க்கு எதிராக போராட்டம்: பேராசிரியர் ஜெயராமன் உள்பட 115 பேர் மீது வழக்குபதிவு

    ஓ.என்.ஜி.சி.க்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட பேராசிரியர் ஜெயராமன் உள்பட 115 பேர் மீது சட்ட விரோதமாக பொதுமக்களை கூட்டியது, பொது அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    பேரளம்:

    திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் உள்ள தீயணைப்பு நிலையம் பின்புறம் தென்னஞ்சார் என்ற இடத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் கச்சா எண்ணெய் எடுக்க ஆயத்த பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

    இதற்கு அந்த பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று நன்னிலத்தில் இருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வெளியேறக்கோரி நன்னிலம் மாப்பிள்ளை குப்பம் மின்வாரிய அலுவலகம் அருகே மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன், அவரது மனைவி சித்ரா மற்றும் இளம்பரிதி, அருள் நேசன், கமலநாதன் ஆகிய 5 பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதைதொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பேராசிரியர் ஜெயராமன் , அவரது மனைவி உள்பட 5 பேரை கைது செய்தனர்.

    இதை கண்டித்து நன்னிலம் பஸ் நிலையம் அருகே பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 151 பேரை போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் கைதான பேராசிரியர் ஜெயராமன் உள்பட அனைவரையும் போலீசார் மாலையில் விடுவித்தனர்.

    இதற்கிடையே ஓ.என்.ஜி.சி.க்கு எதிராக போராடிய பேராசிரியர் ஜெயராமன் , அவரது மனைவு சித்ரா உள்பட 115 பேர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சட்ட விரோதமாக பொதுமக்களை கூட்டியது, பொது அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளில் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


    Next Story
    ×