search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூடங்குளம் அணுமின் நிலைய முதல் அணுஉலையில் தொழில்நுட்ப கோளாறு - மின் உற்பத்தி பாதிப்பு
    X

    கூடங்குளம் அணுமின் நிலைய முதல் அணுஉலையில் தொழில்நுட்ப கோளாறு - மின் உற்பத்தி பாதிப்பு

    கூடங்குளம் அணுமின் நிலைய முதல் அணுஉலையில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷ்ய நாட்டு உதவியுடன் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின்உற்பத்தி நடந்து வருகிறது. இரண்டு அணு உலைகளிலும் சேர்த்து மொத்தம் 2 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு மத்திய மின்தொகுப்புக்கு அனுப்பப்பட்டு வந்தது.

    இந்நிலையில் 2-வது அணு உலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு கடந்த மாதம் 20-ந் தேதி மீண்டும் மின்உற்பத்தி தொடங்கியது. அதன் பின் இருமுறை டர்பன் செயல்பாடு நிறுத்தப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. அது வெற்றிகரமாக முடிந்ததை அடுத்து கடந்த 30-ந் தேதி முதல் 2-வது அணுஉலையில் மீண்டும் மின்உற்பத்தி தொடங்கியது. மின்உற்பத்தி அளவு படிப்படியாக உயர்த்தப்பட்டு கடந்த 5-ந் தேதி ஆயிரம் மெகாவாட்டை எட்டியது.

    இதையடுத்து கூடங்குளம் அணுமின்நிலையத்தில் மின் உற்பத்தி மீண்டும் 2 ஆயிரம் மெகாவாட்டை எட்டியது. இந்நிலையில் முதலாவது அணுஉலையில் இன்று தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து அந்த அணுஉலையில் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது. முதலாவது அணுஉலையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாரை சரிசெய்யும் பணியில் என்ஜினீயர்கள் ஈடுபட்டுள்ளனர். தற்போது கூடங்குளம் அணுமின்நிலையத்தில் 2-வது அணுஉலையில் மட்டும் ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி நடந்து வருகிறது.

    Next Story
    ×