search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவள்ளூரில் திருநங்கைகளுக்கு தனி கழிவறை
    X

    திருவள்ளூரில் திருநங்கைகளுக்கு தனி கழிவறை

    மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் மற்றும் மாவட்ட தாய் அரவாணிகளின் தாய் விழுதுகள் அமைப்பு சார்பில், திருவள்ளூர் நகராட்சி நிர்வாகத்தின் உதவியுடன் திருநங்கைகளுக்கு என தனி கழிப்பறை கட்டப்பட்டுள்ளது.
    திருவள்ளூர்:

    திருவள்ளூர் முக்கிய வணிக பகுதியாக உள்ளது. திருவள்ளூருக்கு வரும் திருநங்கைகள் அங்குள்ள பொதுகழிப்பறைக்கு செல்லும்போது எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டனர்.

    இதையடுத்து திருநங்கைகளுக்கு தனி கழிப்பறை கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

    இந்த நிலையில் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் மற்றும் மாவட்ட தாய் அரவாணிகளின் தாய் விழுதுகள் அமைப்பு சார்பில், திருவள்ளூர் நகராட்சி நிர்வாகத்தின் உதவியுடன் திருநங்கைகளுக்கு என தனி கழிப்பறை கட்டப்பட்டுள்ளது.

    திருவள்ளூர் மாவட்டத்தில் முதன் முதலாக திருவள்ளூர் பஸ் நிலையம் மற்றும் ரெயில் நிலையம் ஆகிய பகுதிகளில் கட்டப்பட்ட கழிவறைகள் இன்று பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.

    இதுகுறித்து திருநங்கைகள் கூறும்போது, “திருநங்கைகளுக்காக தனி கழிப்பறை கட்டப்பட்டது வரவேற்கத்தக்கது. இதனால் நாங்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளோம். இதுபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பேருந்து நிலையங்களிலும் தனி கழிவறைகள் அமைக்க வேண்டும்” என்றனர்.
    Next Story
    ×