search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரை ஆதீனமடத்துக்குள் நுழைய நித்யானந்தாவுக்கு தடை நீட்டிப்பு
    X

    மதுரை ஆதீனமடத்துக்குள் நுழைய நித்யானந்தாவுக்கு தடை நீட்டிப்பு

    மதுரை ஆதீனமடத்துக்குள் நுழைய நித்யானந்தாவுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
    மதுரை:

    மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த ஜெகதலபிரதாபன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    கடந்த 2012-ல் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் நித்யானந்தா தன்னை ஆதீனம் மடத்தின் 293-வது மடாதிபதியாக பிரகடனப்படுத்திக் கொண்டார்.

    நித்யானந்தா நியமனத்தை ரத்து செய்யக்கோரி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தோம். அந்த வழக்கில் நித்யானந்தா ஆதீனமாக நியமனம் செய்வதற்கு தகுதியுடையவர் அல்ல என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நித்யானந்தா ஆதீன மடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். பின்னர் அவர் மடத்துக்குள் நுழைய நீதிமன்றம் தடை விதித்தது.

    இந்நிலையில் கோர்ட்டு உத்தரவுகளை மறைத்து சட்டத்துக்கு புறம்பாக கோர்ட்டை தவறாக பயன்படுத்தி ஆதீன மடத்தையும், அதன் விலை மதிப்பில்லா சொத்துக்களையும் கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் ஆதீன மடத்துக்குள் செல்வதற்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டு மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    மடத்துக்குள் நுழைவதற்கு நித்யானந்தாவுக்கு போலீஸ் அனுமதி வழங்கினால் தேவையில்லாத சர்ச்சைகளும், சட்டம் - ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படும். நித்யானந்தாவிடம் இருந்து ஆதீன மடத்தை பாதுகாக்கவும், மடத்துக்குள் நுழைய நித்யானந்தாவுக்கு நிரந்தர தடை விதித்தும் உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இந்த வழக்கை கடந்த அக்டோபர் மாதம் 11-ந்தேதி விசாரித்த ஐகோர்ட்டு, ஆதீன மடத்திற்குள் நுழைய நித்யானந்தாவிற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

    இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நித்யானந்தா தரப்பில் யாரும் ஆஜராகவில்லை. இதையடுத்து வழக்கினை இறுதி விசாரணைக்காக டிசம்பர் 7-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

    இதனையடுத்து மதுரை ஆதீன மடத்துக்குள் நுழைய நித்யானந்தாவுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×