search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை தொடர்ந்து சரிவு
    X

    நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை தொடர்ந்து சரிவு

    நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு சிறப்பு கூட்டத்தில் முட்டை கொள்முதல் விலையை 20 காசுகள் குறைத்து 465 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது.
    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை கடந்த 16-ந் தேதி வரலாறு காணாத அளவில் 516 காசுகளாக உயர்ந்தது. இந்த விலை 5 நாட்களுக்கு நீடித்தது.

    பின்னர் முட்டை விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு சிறப்பு கூட்டத்தில் முட்டை கொள்முதல் விலையை குறைத்து 485 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டது.

    இந்த நிலையில் இன்று நடந்த கூட்டத்தில் மேலும் 20 காசுகள் குறைந்து 465 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது.

    கடந்த 3 நாட்களில் முட்டை கொள்முதல் 51 காசுகள் குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×