search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரியல் எஸ்டேட்டுக்கு ஜி.எஸ்.டி.யை தவிர்க்க கோரி நிலத்தரகர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
    X

    ரியல் எஸ்டேட்டுக்கு ஜி.எஸ்.டி.யை தவிர்க்க கோரி நிலத்தரகர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

    ஜி.எஸ்.டி. வரிவிதிப்பின் கீழ் ரியல் எஸ்டேட் தொழில் முழுவதையும் மத்திய அரசு கொண்டு வருவதை தவிர்க்ககோரி நிலத்தரகர்கள் நலச்சங்கம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    சென்னை:

    ஜி.எஸ்.டி. வரிவிதிப்பின் கீழ் ரியல் எஸ்டேட் தொழில் முழுவதையும் மத்திய அரசு கொண்டு வருவதை தவிர்க்ககோரி இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட்டெவலப்பர்ஸ் நிலத்தரகர்கள் நலச்சங்கம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் அகில இந்திய தலைவர் வி.என்.கண்ணன் தலைமை தாங்கினார்.

    ஆர்ப்பாட்டத்தில் பங்கு பெற்றவர்கள் தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய அரசுக்கு எதிராக கோ‌ஷங்கள் எழுப்பினார்கள்.

    இதுகுறித்து வி.என்.கண்ணன் கூறுகையில், ‘ஜி.எஸ்.டி. வரிவிதிப்பின் கீழ் ரியல் எஸ்டேட் தொழில் முழுவதையும் மத்திய அரசு கொண்டுவருவதால் சுமார் 74 வகையான தொழில்புரிவோர் குடும்பங்கள், பொதுமக்கள் பாதிப்படையும் நிலை உள்ளது. எனவே மத்திய அரசு தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும்’ என்றார்.

    இதில் கட்டிட தொழிலாளர் சங்கம் மாநில தலைவர் பொன்குமார், வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன், தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் எஸ்.யுவராஜ், கட்டுமான பிரிவு மாநில தலைவர் சுரேஷ் கிர‌ஷன், சங்க நிர்வாகிகள் செந்தில்குமார், லயன் குமார், சேலவாயல் சரவணன், தேவக்குமார், பந்தல் செல்வம்,

    கே.வி.எஸ்.சரவணன், வக்கீல் தனசேகரன், நிர்மலா, செண்பக மூர்த்தி, தேவேந்திரன், பாலசுப்பிரமணியன், மகேந்திரன், டில்லிபாபு, வளசை பிரபு, யுவராஜ், ரவிராஜ், மேகநாதன், முனீர், மாவட்ட தலைவர்கள் பாலசுப்பிரமணியன், ராஜபாண்டி, பாபு மற்றும் டி.ஜி.எஸ்.சதீஷ், ஜெய்ஹரி, ஜெகன் நாதன், தணிகாசலம், பழனி, மணி, முத்துராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×