search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரேசன் கடையில் சர்க்கரை விலை உயர்வு: காஞ்சீபுரம்- திருவள்ளூர் மாவட்டத்தில் தி.மு.க.வினர் போராட்டம்
    X

    ரேசன் கடையில் சர்க்கரை விலை உயர்வு: காஞ்சீபுரம்- திருவள்ளூர் மாவட்டத்தில் தி.மு.க.வினர் போராட்டம்

    ரேசன் கடைகளில் சர்க்கரை விலை உயர்த்தப்பட்டதை கண்டித்து தி.மு.க. சார்பில் ரேசன் கடைகள் முன்பு போராட்டம் நடந்தது.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ. தலைமையில் ஏராளமான தி.மு.க.வினர் வாலாஜாபாத் பஸ்நிலையம் அருகே சின்னக்கடை பகுதியில் உள்ள ரேசன் கடை முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். சர்க்கரை விலை உயர்வினை திரும்ப பெற வேண்டும் என்று கோ‌ஷங்கள் எழுப்பினர்.

    ஆர்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர் சேகர், பேரூராட்சி செயலாளர் பாண்டியன், நிர்வாகிகள் சுரேஷ் குமார், சுந்தர்ராமன், தாஸ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். காங்கிரஸ் மேற்கு மாவட்ட தலைவர் மதியழகன் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

    காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ரேசன் கடை முன்பு நடந்த ஆர்பாட்டத்தில் காஞ்சீபுரம் எம்.எல்.ஏ. எழிலரசன், நகரசெயலாளர் சன்பிராண்ட் ஆறுமுகம், நிர்வாகிகள் அ.சேகர், வி.எஸ்.ராமகிருஷ்ணன், வ.கந்தசாமி, சுகுமாறன், சிகாமணி, சந்துரு, சுரேஷ் கலந்து கொண்டனர்.

    இதேபோல் செய்யூரில் எம்.எல்.ஏ. ஆர்.டி.அரசு தலைமையிலும், மதுராந்தகத்தில் புகழேந்தி எம்.எல்.ஏ. தலைமையில் ரேசன் கடைகள் முன்பாக நடைபெற்ற ஆர்பாட்டத்தில் ஏராளமான தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

    திருவள்ளூர் நகரத்தில் 11 கடைகள் உட்பட வட்டத்தில் உள்ள 232 கடைகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



    திருவள்ளூர் ஜே.என்.சாலையில் உள்ள ரேசன் கடை முன்பு வி.ஜி.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்.

    மீஞ்சூர் சூர்யா நகரில் நகர செயலாளர் மோகன்ராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அத்திப்பட்டு முன்னாள் தலைவர் எம்.டி.ஜி. கதிர்வேல் தலைமையில் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பழவேற்காட்டில் முகமது அலி தலைமையில் போராட்டம் நடந்தது.

    திருவொற்றியூர் விம்கோ நகரில் உள்ள ரேசன் கடை முன்பு கே.பி.பி.சாமி எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பகுதி செயலாளர் கே.பி.சங்கர் முன்னிலை வகிக்கிறார். இதில் மு.ராமநாதன், நாகலிங்கம், விவேகானந்தன் உட்பட 100-க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×