search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டத்தில் ரேசன் கடைகள் முன்பு தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
    X

    கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டத்தில் ரேசன் கடைகள் முன்பு தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

    ரேசன் கடைகளில் சர்க்கரை விலை உயர்த்தப்பட்டதை கண்டித்து தி.மு.க. சார்பில் இன்று ரேசன் கடைகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கூட்டணி கட்சியினரும் கலந்து கொண்டனர்.
    கோவை:

    கோவை சித்தாபுதூர் ஹரிபுரம் பகுதியில் உள்ள ரேசன் கடை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தெற்கு மாநகர் மாவட்ட பொறுப்பாளர் கார்த்திக் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். குனியமுத்தூர் இடையர் பாளையம் ரோடு பிரிவில் உள்ள ரேசன் கடை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு வடக்கு மாநகர் மாவட்ட பொறுப்பாளர் முத்துசாமி தலைமை தாங்கினார்.

    ராமநாதபுரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் மயூரா ஜெயக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல மாநகர் முழுவதும் 150-க்கும் மேற்பட்ட ரேசன் கடைகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் திரளான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டு கோ‌ஷங்கள் எழுப்பினர்.

    பொள்ளாச்சியில் புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் தமிழ்மணி தலைமையிலும், பெரியநாயக்கன்பாளையத்தில் புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    கருமத்தம்பட்டி, சூலூர், சோமனூர், வால்பாறை, ஆனைமலை, கவுண்டம்பாளையம், அன்னூர், பேரூர், தொண்டாமுத்தூர், வடவள்ளி உள்பட்ட புறநகர் பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட கடைகள் முன்பு தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.

    திருப்பூர் மாவட்டத்தில் 320 ரேசன்கடைகள் செயல்பட்டு வருகிறது. இதில் மாநகர் பகுதியில் 100 கடைகளும், புறநகர் பகுதியில் 220 கடைகளும் செயல்பட்டு வருகிறது. வெள்ளக்கோவில் அருகே உள்ள வெள்ளகோவில் ரேசன் கடை முன்பு தி.மு.க. இளைஞரணி மாநிலசெயலாளர் வெள்ளகோவில் சாமிநாதன் தலைமையில் தி.மு.க.வினர் முற்றுகை போராட்டம் நடத்தினர். வடக்கு மாவட்ட செயலாளர் செல்வராஜ் தலைமையில் மாநகரில் உள்ள ரேசன்கடைகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தெற்கு மாவட்ட செயலாளர் பத்மநாபன் தலைமையில் காங்கயத்தில் ரேசன்கடை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதேபோல் பல்வேறு இடங்களில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க.வினர் மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

    நீலகிரி மாவட்டத்தில் 103 ரேசன்கடைகள் உள்ளன. இந்த கடைகளின் முன்பு தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் இன்று காலை சர்க்கரை விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஊட்டி பகுதியில் மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார், காங்கிரஸ் சார்பில் கணேஷ் எம்.எல்.ஏ., நகர செயலாளர் ஜார்ஜ், கோத்தகிரி பகுதியில் முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன், குன்னூர் பகுதியில் மாவட்ட செயலாளர் முபாரக், கூடலூர் பகுதியில் திராவிடமணி எம்.எல்.ஏ., பேச்சாளர் பாண்டியராஜன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    Next Story
    ×