search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் சரிவு
    X

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் சரிவு

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து படிப்படியாக குறைந்துள்ளது.
    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து படிப்படியாக குறைந்தது.

    நேற்று ஆயிரத்து 384 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து ஆயிரத்து 106 கனஅடியாக குறைந்தது.

    அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக 7 ஆயிரம் கனஅடியும், மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாயில் ஆயிரம் கனஅடியும் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    அணைக்கு வரும் தண்ணீரைவிட அணையிலிருந்து அதிக அளவில் தண்ணீர் வெளியேற்றப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

    நேற்று 81.88 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 81.29 அடியாக சரிந்தது. இனிவரும் நாட்களில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து நீர்வரத்து அதிகரித்தால் மட்டுமே மேட்டூர் அணை நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது.
    Next Story
    ×