search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பள்ளிகளுக்கு முட்டை விநியோகம் நிறுத்தப்படவில்லை: தனியார் நிறுவன அதிகாரி
    X

    பள்ளிகளுக்கு முட்டை விநியோகம் நிறுத்தப்படவில்லை: தனியார் நிறுவன அதிகாரி

    சத்துணவு கூடங்கள் மற்றும் பள்ளிகளுக்கு முட்டை விநியோகம் நிறுத்தப்படவில்லை என தனியார் நிறுவன அதிகாரி கூறியுள்ளார்.
    நாமக்கல்:

    தமிழகத்தில் அங்கன்வாடி குழந்தைகளுக்கும் அரசு பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கும் மதிய உணவு வழங்கப்படுகிறது. மொத்தம் 69 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு இந்த உணவு வழங்கப்படுகிறது. இதில் வாரத்துக்கு 5 நாட்கள் மதிய உணவுடன் முட்டை வழங்கப்படுகிறது.

    இதற்காக நாமக்கல் மாவட்டம் திருச் செங்கோட்டை சேர்ந்த தனியார் நிறுவனத்திடம் இருந்து வாரம் 2 கோடியே 50 லட்சம் முட்டைகளை தமிழக அரசு கொள்முதல் செய்கிறது. முட்டையின் விலை தற்போது 5 ரூபாய 16 காசாக உயர்ந்து உள்ளது. இதனால் முட்டை விநியோகம் நிறுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகின. தொடர்ந்து பள்ளி குழந்தை களுக்கும், மாணவ, மாணவி களுக்கும் முட்டை வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

    இந்த நிலையில் முட்டையை கொள்முதல் செய்து சத்துணவு கூடங்களுக்கு விநியோகிக் கும் திருச்செங் கோட்டை சேர்ந்த தனியார் நிறுவனத்தில் முட்டை விநியோக பிரிவு பொது மேலாளர் வால்வேஸ்வரன் முட்டை விநியோகத்தை நிறுத்தவில்லை என்று கூறினார்.

    எங்கள் நிறுவனம் முட்டைகளை வழங்க 4 ரூபாய் 34 காசுக்கு ஒப்பந்தம் பெற்றுள்ளது. தினமும் 2 கோடியே 40 லட்சம் முட்டைகள் என மாதத்துக்கு 8 கோடியே50 லடசம் முட்டைகளை விநியோகம் செய்து வருகிறோம். கொள்முதல் விலை அதிகம் என்பதற்காக விநியோகத்தை நிறுத்த முடியாது.

    தொடர்ந்து முட்டைகளை வழங்கி வருகிறோம். திங்கள், செவ்வாய், புதன்கிழமை ஆகிய நாட்களுக்கான முட்டைகளை சனிக்கி ழமையே விநியோகம் செய்துள்ளோம். வியாழன், வெள்ளிக்கிழமைக்குஉரிய முட்டைகளை நேற்று முதல் விநியோகம் செய்துள்ளோம். இந்த பணி இன்று முடிந்து விடும்.

    மாணவர்களுக்கு வழங்கப்படும் முட்டை விநியோகம் நிறுத்தப் படவில்லை. யாரோ தவறான தகவலை பரப்பி உள்ளனர். எங்கு வேண்டுமானாலும் சோதனை நடத்தி முட்டை இருப்பு இருப்பதை தெரிந்து கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×