search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேனி அருகே கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட கும்பல் கைது
    X

    தேனி அருகே கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட கும்பல் கைது

    தேனி அருகே கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.

    கூடலூர்:

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள வண்டி பெரியாரில் கடந்த மே மாதம் கட்டப்பணையைச் சேர்ந்த ஜோஜோ ஜோசப் - அனுபமா தம்பதியிடம் இருந்து ரூ.5 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுகள் பிடிபட்டது.

    விசாரணையில் கள்ள நோட்டுகளை மதுரை எஸ்.எஸ். காலனியைச் சேர்ந்த சண்முகசுந்தரம், ராம் நகரைச் சேர்ந்த ஜீபாய் என்ற அன்புச் செல்வம், தேனி வீரபாண்டியைச் சேர்ந்த அரசு போக்குவரத்து கழக ஓட்டுனர் அய்யர் ஆகியோர் கொடுத்தது தெரிய வந்தது.

    அவர்களை வண்டி பெரியார் போலீசார் கைது செய்தனர். இவர்களுடன் தொடர்புடைய கள்ள நோட்டு கும்பலை பிடிக்க அன்புச் செல்வம் மூலம் கள்ள நோட்டு மாற்ற வருமாறு போடி மெட்டு பகுதிக்கு வரவழைத்து கொல்லத்தைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் (வயது48), நெடுங்கண்டம் சுனில் குமார் (39), குமுளி அணைக்கரையச் சேர்ந்த ரவீந்திரன் (57), திருச்சூரைச் சேர்ந்த சிகாபுதீன் (43) ஆகியோரிடம் இருந்து ரூ.37 லட்சத்து 92 ஆயிரம் கொண்ட 500 ரூபாய் கள்ள நோட்டுகளை கைப்பற்றினர்.

    இதற்கு மூல காரணமாக இருந்த கேரள மாநிலம் கூட்டாறு பகுதியைச் சேர்ந்த ஜோபின் (32), ஸ்ரீஜித் (24), திருச்சூரைச் சேர்ந்த ஜிண்டோ ஆகிய 3 பேரையும் கடந்த 6 மாதமாக போலீசார் தேடி வந்தனர்.

    போடி மெட்டு தனியார் விடுதியில் தங்கி இருந்த 3 பேரையும் கட்டப்பணை டி.எஸ்.பி. ஜிமோகன் கைது செய்தார்.

    விசாரணையில் அவர்கள் ரூ.70 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுகளை தமிழக - கேரள எல்லைப்பகுதியில் மாற்றியது தெரிய வந்துள்ளது. இவர்களிடம் ரூ.5 கோடி அளவில் கள்ள நோட்டுகள் அடிப்பதற்காக சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அச்சு எந்திரம், காகித கட்டுகள், மை டப்பாக்கள் போன்றவற்றையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

    Next Story
    ×