search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜி.எஸ்.டி.வரியை அனுமதித்தால் நாட்டின் சுதந்திரம் பறிபோகும்: வெள்ளையன்
    X

    ஜி.எஸ்.டி.வரியை அனுமதித்தால் நாட்டின் சுதந்திரம் பறிபோகும்: வெள்ளையன்

    ஜி.எஸ்.டி.வரியை அனுமதித்தால் நாட்டின் சுதந்திரம் பறிபோகும் என்று வணிகர் சங்கங்களின் பேரவை மாநில தலைவர் வெள்ளையன் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

    பெரம்பலூர்:

    வணிகர் சங்கங்களின் பேரவை மாநில தலைவர் வெள்ளையன் பெரம்பலூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாட்டில் உள்ள பிரச்சினைகளில் மிகப்பெரியது ஜி.எஸ்.டி. வரி விதிப்புதான். ஏதோ புதிய மாற்றத்திற்காக கொண்டு வரப்படவில்லை. அவசர கோலத்தில் அள்ளி தெளித்து விட்டனர். ஜி.எஸ்.டி.யில் அதிகமான வரி விதித்து விட்டு தற்போது எங்கெல்லாம் எதிர்ப்பு ஏற்படுகிறதோ அங்கு மட்டும் வரியை குறைக்கின்றனர். ஜி.எஸ்.டி.யை எப்படியாவது நிலை நாட்ட வேண்டும் என்பதை தவிர வேற எந்த கொள்கையும் மத்திய அரசிடம் இல்லை. இந்த வரி விதிப்பால் உள்நாட்டு வணிகம் சீரழிந்து விடும். மக்களின் சுய தொழில்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்றால் ஜி.எஸ்.டி.யை நீக்க வேண்டும்.

    இந்த வரி அன்னிய திணிப்பாகும். ஏற்கனவே 2007ல் வாட் வரியை கொண்டு வந்து 10 ஆண்டுகளுக்கு பின்னர் அதை கைவிட்டனர். தற்போது ஜி.எஸ்.டி. வரியை கொண்டு வந்துள்ளனர். இது நீடித்தால் ஆன்லைன் வர்த்தகம் பெருகும். உள் நாட்டு வர்த்தகம் மிகவும் பாதிப்படையும்.

    ஆன்லைன் வர்த்தகம் மூலம் அனைத்து பொருட்களும் விலை உயரும். இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுவர். ஜி.எஸ்.டி.வரியால் ஒரே நாடு, ஒரே வரி என்பது வெற்று கோ‌ஷம். ஜி.எஸ்.டி.வரியை அனுமதித்தால் நாட்டின் சுதந்திரம் பறிபோகும்.மேலும் சிறு தொழில்கள் மட்டுமின்றி அனைத்து தொழில்களும் பாதிக்கப்படும்.

    எனவே இந்த வரியை எதிர்த்து வணிகர்கள் சங்கம் ஜனவரி 2018முதல் பல கட்ட போராட்டங்கள் நடத்தப்பட உள்ளன. 2018 ஜனவரி 1-ந்தேதி அனைத்து கடைகளிலும் கருப்பு கொடி ஏற்றப்படும். தொடர்ந்து ஜனவரி 30-ந்தேதி காந்தி 70 என்ற பெயரில் சென்னை அல்லது திருச்சியில் மாநாடு நடத்தப்படும். இதில் உள்நாட்டு பொருட்களை வாங்க வேண்டும்.வெளி நாட்டு பொருட்களை புறக் கணிக்குமாறு வலியுறுத்தப்படும். மேலும் போராட்டத்தின் போது சிறை செல்லவும் வியாபாரிகள் தயாகராக இருக்க வேண்டும். இதற்காக வியாபாரிகளிடம் ஒப்புதல் பெறும் வகையில் வணிக போராளி படிவம் பூர்த்தி செய்து வாங்கப்படும். மீண்டும் சுதந்திர போராட்டம் தொடங்கப்படும். கவர்னர் ஆய்வு செய்வது ஜனநாயகத்திற்கு எதிரான செயல். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×