search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கப்பற்படையிடம் ஒப்படைக்க அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் தயார்: இந்திய அணுசக்தி தலைவர்
    X

    கப்பற்படையிடம் ஒப்படைக்க அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் தயார்: இந்திய அணுசக்தி தலைவர்

    கப்பற்படையிடம் ஒப்படைக்க அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் தயார் என இந்திய அணுசக்தி தலைவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

    ஆலந்தூர்:

    இந்திய அணுசக்தி தலைவர் சேகர் பாசு சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கல்பாக்கம் அணுஉலை செயல்பாடுகளில் சிறிய பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது. அதை ஆய்வு செய்ய வந்திருக்கிறேன். 2-வது அணுசக்தி நீர் மூழ்கி கப்பல் கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டு இந்திய கப்பற்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    இன்னும் ஒரிரு மாதத்துக்குள் அது செயல் பாட்டுக்கு வரும். நீர் மூழ்கி அணுசக்தி கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நாள் குறித்து கப்பற்படை முடிவு செய்யும்.

    தமிழகத்தில் கூடங்குளம் அணு மின் நிலையம் வெற்றிகரமாக இயங்கி வருகிறது. தேனி மாவட்டத்தில் ‘நியூட்ரினோ’ ஆய்வு மையம் அமைப்பதற்கு தொழில் முறை ஆணையத்தில் அனுமதி கோரியுள்ளோம். அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அது தீர்ந்தவுடன் ஆய்வு மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.


    அணு உலைகளில் வெளி வரும் அணு கழிவுகளை அகற்றுவதில் உலக அளவில் பிரச்சினை நிலவி வருகிறது. இது குறித்து உலக நாடுகளுடன் நடந்த கூட்டத்தில் அணு கழிவுகளால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க பல வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×