search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குழந்தையை ரூ.4 லட்சத்துக்கு விற்க முயற்சி: காப்பக நிர்வாகி - ஆட்டோ டிரைவர்களிடம் விசாரணை
    X

    குழந்தையை ரூ.4 லட்சத்துக்கு விற்க முயற்சி: காப்பக நிர்வாகி - ஆட்டோ டிரைவர்களிடம் விசாரணை

    பச்சிளம் குழந்தையை ரூ.4 லட்சத்துக்கு விற்க முயன்றதாக வெளியான செய்தியையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் தனியார் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் பராமரிக்கப்பட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் காப்பக நிர்வாக பானுமதி ரூ.4 லட்சத்துக்கு ஆண் குழந்தையை விற்க பேரம் பேசுவது தொடர்பான வீடியோ மற்றும் ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.

    இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் நல உறுப்பினர் கலாவதி, ராமநாதபுரம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் சாமுவேல் மற்றும் அதிகாரிகள் காப்பகத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் பானுமதி கூறுகையில், சக்கரக்கோட்டையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் கதிரேசன் குழந்தையை கொடுத்து பராமரிக்குமாறு கூறியதாக தெரிவித்தார். மேலும் குழந்தையை விற்பனை செய்ய தான் பேரம் பேசவில்லை என்றும் அவர் கூறினார்.

    இதையடுத்து அவரிடம் இருந்த குழந்தையை மீட்டு ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    மேலும் மீட்கப்பட்ட குழந்தை யாருடையது? காப்பகத்துக்கு எப்படி கொண்டுவரப்பட்டது? என ராமநாதபுரம் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குழந்தையை காப்பகத்தில் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர் கதிரேசன், அவரிடம் குழந்தையை கொடுத்த குதக்கோட்டையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் செந்தில்குமார் ஆகியோரையும் போலீசார் பிடித்துள்ளனர்.

    இந்த சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா?, குழந்தைகள் விற்பனை இதற்கு முன்பு நடந்துள்ளதா? என்பது குறித்து போலீசார் 3 பேரிடமும் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×