search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாசனத்திற்காக அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
    X

    பாசனத்திற்காக அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

    பாசனத்திற்காக அமராவதி அணையில் இருந்து தண்ணீரை இன்று அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.
    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணையில் இருந்து அமராவதி பழைய மற்றும் புதிய ஆயக்காட்டு பாசன பகுதிகளுக்கு 2-ம் கட்டமாக மொத்தம் 1916 மில்லியன் கன அடி தண்ணீர் இன்று முதல் திறந்து விடும்படி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு இருந்தார்.

    அதன்படி இன்று அமராவதி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் இதில் கலந்து கொண்டு அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார். இதில் கலெக்டர் பழனிசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் அசோகன், என்ஜினீயர் தர்மலிங்கம், உதவி செயற்பொறியாளர் சரவணன், உதவி பொறியாளர்கள் பாபு சபரீசரன், குமரவேல், தாசில்தார் தங்கவேல், ஜெயக்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 21867 ஏக்கர் பழைய பாசன பகுதிகளுக்கு அமராவதி ஆற்றில் 10 வாய்க்கால்களுக்கு (அலங்கியம் பழைய வாய்க்கால் முதல் கரூர் வலது கரை வாய்க்கால் வரை) இன்று முதல் தகுந்த இடைவெளி விட்டு 1383 மில்லியன் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 25250 ஏக்கர் புதிய பாசன பகுதிகளுக்கு அமராவதி பிரதானக் கால்வாய் மூலம் இன்று முதல் தகுந்த இடைவெளி விட்டு 533 மில்லியன் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    Next Story
    ×