search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    களக்காடு தாமரைகுளம் தண்ணீர் நிறைந்து காட்சியளிப்பதை படத்தில் காணலாம்.
    X
    களக்காடு தாமரைகுளம் தண்ணீர் நிறைந்து காட்சியளிப்பதை படத்தில் காணலாம்.

    நெல்லை மாவட்ட அணைகளுக்கு நீர்வரத்து குறைந்தது - பாசனத்துக்கு தொடர்ந்து தண்ணீர் திறப்பு

    நெல்லை மாவட்ட அணைகளுக்கு நீர்வரத்து குறைந்தது - பாசனத்துக்கு தொடர்ந்து தண்ணீர் திறப்பு
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மழை பெய்தது. நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையினால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணைகளில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக மாவட்டத்தில் மழை இல்லை. எனினும் அணைகளுக்கு நீர்வரத்து இருந்தது.

    இந்த நிலையில் இன்று காலை முதல் அணைகளுக்கு தண்ணீர் வரத்து குறைந்தது. பிரதான பாசன அணையான பாபநாசம் அணை நீர்மட்டம் இன்று காலை 103.05 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு நீர்வரத்து 872 கன அடியாக குறைந்தது. அணையில் இருந்து பாசனத்துக்காக 904.5 அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதே போல சேர்வலாறு அணை நீர்மட்டம் 113.91 அடியாகவும், மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 81.05 அடியாகவும் உள்ளன. மணிமுத்தாறு அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 207 கன அடியாக குறைந்துள்ளது.

    இந்த அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. கடனா அணை நீர்மட்டம் 76.50 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 66.25 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 67.92 அடியாகவும், குண்டாறு அணை நீர்மட்டம் 36.10 அடியாகவும், வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் 25.50 அடியாகவும், நம்பியாறு அணை நீர்மட்டம் 22.96 அடியாகவும், கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 51 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 95.50 அடியாகவும் உள்ளன.

    கடனா அணைக்கு வினாடிக்கு வரும் 70 கன அடி தண்ணீர் அப்படியே பாசனத்துக்கு திறந்து விடப்பட்டு உள்ளது. ராமநதி அணைக்கு நீர்வரத்து 18 அடியாக குறைந்துள்ளது. இந்த அணை யில் இருந்து 35 கன அடி தண்ணீர் பாசனத்துக்கு திறந்து விடப்பட்டு உள்ளது. கருப்பாநதி அணைக்கு நீர்வரத்து 11 அடியாகவும், கொடுமுடியாறு அணைக்கு நீர்வரத்து 5 அடியாகவும், அடவிநயினார் அணைக்கு நீர்வரத்து 45 அடியாகவும் குறைந்துள்ளன.

    மாவட்டத்தில் உள்ள வடக்கு கோடை மேலழகியான், தெற்கு கோடை மேலழகியான், நதியுண்ணி, கன்னடியன் கால்வாய், கோடகன்கால்வாய், பாளையங்கால்வாய், நெல்லை கால்வாய், மருதூர் மேலக்கால்வாய், கீழ கால்வாய் ஆகிய கால்வாய்களில் தொடர்ந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் கால்வாய் பாசன பகுதிகளில் பிசான சாகுபடி பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

    Next Story
    ×