search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டாக்டர்கள்-மருத்துவ ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்த போது எடுத்த படம்.
    X
    டாக்டர்கள்-மருத்துவ ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்த போது எடுத்த படம்.

    கும்பகோணத்தில் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள்-ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

    கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றும் டாக்டர்கள், நர்சுகள் மற்றும் ஊழியர்கள் இன்று காலை பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
    கும்பகோணம்:

    கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றும் டாக்டர்கள், நர்சுகள் மற்றும் ஊழியர்கள் இன்று காலை பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    மருத்துவ பணி செய்பவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். முறையாக சிகிச்சை அளித்தும் நோயாளிகள் இறந்தால் தகராறில் ஈடுபடும் சமூக விரோத செயலை தடுக்க வேண்டும். காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தையொட்டி டாக்டர்கள் காலை 8 மணி முதல் 10 மணிவரை நோயாளிகளை கவனிக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டதால் சிகிச்சைக்கு வந்த பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

    ஆர்ப்பாட்டம் முடிவடைந்ததும் டாக்டர்கள், நர்சுகள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து கொண்டு வழக்கம் போல் தங்கள் பணிகளில் ஈடுபட்டனர்.
    Next Story
    ×