search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல்
    X
    தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல்

    திருப்பூர்- வஞ்சிப்பாளையம் இடையே தண்டவாளத்தில் விரிசல்

    திருப்பூர்-வஞ்சிப்பாளையம் இடையே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதால் கோவை நோக்கி வந்த ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் அவதியடைந்தனர்.
    திருப்பூர்:

    திருப்பூர்-வஞ்சிப்பாளையம் ரெயில் நிலையங்களுக்கு இடையே இன்று காலை சென்னையில் இருந்து கோவை நோக்கி வந்த ஒரு ரெயில் கடந்து சென்றது. அப்போது வஞ்சிப்பாளையம் பகுதியில் வந்த போது தண்டவாளத்தில் பயங்கர சத்தம் கேட்டது.

    இதையடுத்து ரெயில் என்ஜின் டிரைவர் இது குறித்து திருப்பூர் ரெயில் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு ரெயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் விரைந்து சென்றனர்.

    அப்போது 2 தண்டவாளங்கள் இணையும் பகுதியில் விரிசல் ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து விரிசல் சரி செய்யும் பணி முழுவீச்சில் நடந்தது.

     தண்டவாள விரிசலை சரி செய்யும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள்.

    இதன் காரணமாக கோவை நோக்கி வந்த ஈரோடு-கோவை பயணிகள் ரெயில் விஜயமங்கலத்திலும், மங்களூர் எக்ஸ்பிரஸ் ஊத்துகுளி ரெயில் நிலையத்திலும், தன்பாத்தில் இருந்து கோவை வழியாக கேரள மாநிலம் ஆலப்புழை செல்லும் அலப்பி எக்ஸ்பிரஸ் திருப்பூர் ரெயில் நிலையத்திலும் நிறுத்தப்பட்டது. ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதியடைந்தனர். பின்னர் தண்டவாள விரிசல் சரி செய்த பின்னர் ஒவ்வொரு ரெயிலாக மெதுவாக இயக்கப்பட்டது.

    கோவையில் இருந்து சென்னை நோக்கி செல்லும் அனைத்து ரெயில்களும் வழக்கம் போல் இயக்கப்பட்டது.

    தண்டவாள விரிசலுக்கான காரணம் குறித்து ரெயில்வே அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
    Next Story
    ×