search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய லட்சுமி ஜூவல்லரி நகை கடை
    X
    வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய லட்சுமி ஜூவல்லரி நகை கடை

    புதுவையில் பிரபல நகைக் கடையில் வருமான வரித்துறை சோதனை

    புதுவையில் உள்ள பிரசித்தி பெற்ற நகை கடையான ஸ்ரீலட்சுமி ஜூவல்லரி மற்றும் அதன் சார்பு நிறுவனங்களிலும் வருமான வரித்துறையினர் இன்று சோதனை நடத்தினார்கள்.
    புதுச்சேரி:

    தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் தினகரன் வீடு, தோட்டம், அலுவலகம், ஆரோவில்லில் உள்ள பண்ணை வீடு மற்றும் தினகரனின் உறவினர்கள், ஆதரவாளர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் இன்று அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.

    இது போல் புதுவையில் உள்ள பிரசித்தி பெற்ற நகை கடையான ஸ்ரீலட்சுமி ஜூவல்லரி மற்றும் அதன் சார்பு நிறுவனங்களிலும் வருமான வரித்துறையினர் இன்று சோதனை நடத்தினார்கள்.

    புதுவை அம்பலத்தடையார் மடத்து வீதியில் ஸ்ரீலட்சுமி ஜூவல்லர்ஸ் தங்க நகை விற்பனை கடை, வெள்ளி நகை விற்பனை பிரிவு தனித்தனியாக இயங்கி வருகிறது.

    இன்று காலை 8 மணியளவில் 5 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் குழுவினர் ஸ்ரீலட்சுமி ஜூவல்லர்சின் தங்க நகை விற்பனை கடைக்கு வந்தனர். அப்போது கடை திறக்கப்படவில்லை. இதனால் கடை உரிமையாளரை போனில் தொடர்பு கொண்டு கடைக்கு வரும்படி அழைத்தனர்.

    பின்னர் நகை கடை உரிமையாளர் வந்ததும் வருமான வரித்துறை அதிகாரிகள் நகை கடையில் சோதனையை தொடங்கினார்கள்.

    அப்போது காலை 10 மணியளவில் கடை ஊழியர்கள் வந்தனர். ஆனால், அவர்கள் யாரையும் கடைக்குள் அனுமதிக்கப்படவில்லை. இது போல் வெள்ளி நகை விற்பனை பிரிவிலும் ஊழியர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. தொடர்ந்து 2 கடைகளிலும் சோதனை நடத்தி வருகிறார்கள்.

    அதே வேளையில் அம்பலத்தடையார் மடத்து வீதியில் ஸ்ரீலட்சுமி ஜூவல்லரிக்கு சொந்தமாக பணம்-பரிமாற்றம் நிறுவனம் உள்ளது. அந்த நிறவனமும் காலை முதல் திறக்கப்படவில்லை.

    அது போல் காலாப்பட்டு கிழக்கு கடற்கரை சாலையில் இந்த நிறுவனத்துக்கு சொந்தமான 5 நட்சத்திர ஓட்டல் உள்ளது. இந்த இடங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துவார்கள் என கூறப்படுகிறது.



    Next Story
    ×