search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துணைவேந்தர் கணபதி
    X
    துணைவேந்தர் கணபதி

    கோவை பாரதியார் பல்கலைகழக துணைவேந்தர் மீது வழக்குபதிவு

    கோவை பாரதியார் பல்கலைகழக துணை வேந்தர் மீது மனித உரிமை ஆணையத்தில் பெண் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    வடவள்ளி:

    கோவை வடவள்ளியை சேர்ந்தவர் கனகராஜ். இவர் பாரதியார் பல்கலை கழகத்தில் தினக்கூலி அடிப்படையில் டிரைவ ராக பணியாற்றி வந்தார்.

    இவரது மனைவி லட்சுமி பிரபா(வயது 32) பாரதியார் பல்கலைகழகத்தில் உயிர் வேதியியல் பாடத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்.

    இவர் அதேபல்கலைகழகத்தில் உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்துள்ளார். அவருக்கு பணி வழங்கப்படவில்லை.

    இதையடுத்து பல்கலை கழக மானியக்குழு விதிமுறைகளை சுட்டிக்காட்டி லட்சுமி பிரபா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்நிலையில் லட்சுமி பிரபா மற்றொரு பிரிவிலும் முனைவர் பட்டத்துக்காக பாரதியார் பல்கலை கழகத்தில் விண்ணப்பித்திருக்கிறார். கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததால் தன்னை படிக்க விடாமல் இடையூறு செய்வதாகவும், அதே பல்கலைகழகத்தில் கார் டிரைவராக பணியாற்றும் தனது கணவரை உரிய காரணமின்றி சஸ்பெண்டு செய்ததாகவும் துணைவேந்தர் கணபதி மீது லட்சுமி பிரபா தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் தேசிய மனித உரிமை ஆணைய அதிகாரி மாரிமுத்து நேற்று பல்கலை கழகத்தில் விசாரணையில் ஈடுபட்டார்.

    இந்நிலையில் லட்சுமி பிரபா புகாரின்பேரில் துணை வேந்தர் கணபதி மீது தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வட வள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×