search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீட் தேர்வை எதிர்த்து புதுவை அரசு வழக்கு: நாராயணசாமி அறிவிப்பு
    X

    நீட் தேர்வை எதிர்த்து புதுவை அரசு வழக்கு: நாராயணசாமி அறிவிப்பு

    நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக நீதி மன்றம் செல்ல புதுச்சேரி அரசு தயாராக உள்ளது என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
    புதுச்சேரி:

    நீட் எதிர்ப்பு நடவடிக்கைக் குழு சார்பில் புதுவை மி‌ஷன் வீதியில் உள்ள தனியார் ஓட்டலில் நீட் எதிர்ப்பு விளக்க கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது.

    கருத்தரங்கிற்கு நீட் எதிர்ப்பு நடவடிக்கைக்குழு ஒருங்கிணைப்பாளரும், திராவிடர் கழகத்தின் புதுவை மாநில தலைவருமான சிவ. வீரமணி தலைமை தாங்கினார்.

    சிறப்பு அழைப்பாளர்களாக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

    தமிழகம், புதுவை மாணவர்கள் 98 சதவீதம் மதிப்பெண் எடுத்தும் நீட் தேர்வால் மருத்துவம் பயில முடியவில்லை. நீட்டை எதிர்த்து பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் மத்திய அரசு விலக்கு அளிக்கவில்லை.

    இதனால் தமிழகத்தில் மாணவி அனிதா பரிதாபமாக இறந்தார். நீட் தேர்வை எதிர்த்து தமிழகமும், புதுவையும் ஒருமித்த குரலில் போராட வேண்டும்.

    நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக நீதி மன்றம் செல்ல புதுச்சேரி அரசு தயாராக உள்ளது.

    மத்திய அரசு விவசாயிகள், மீனவர்கள் உள்ளிட்ட சாதாரண மக்களுக்கு எதிராகவே செயல்படுகிறது. தமிழகத்தில் அ.தி.மு.க.வை கலைத்து விட்டு உள்ளே வந்து விடலாம் என்று பா.ஜ.க.வினர் நினைக்கின்றனர். தமிழக மக்கள் தெளிவானவர்கள். தமிழகத்தில் பா.ஜனதா எடுபடாது.

    இவ்வாறு நாராயணசாமி பேசினார்.
    Next Story
    ×