என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குரூப்-4, வி.ஏ.ஓ தேர்வுகளை இணைத்து நடத்த டி.என்.பி.எஸ்.சி முடிவு
Byமாலை மலர்2 Nov 2017 1:47 PM GMT (Updated: 2 Nov 2017 1:47 PM GMT)
தமிழக அரசுப்பணிகளான குரூப்-4 மற்றும் வி.ஏ.ஓ தேர்வுகளை இணைத்து நடத்த தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை:
தமிழக அரசில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தேவையான பணியாளர்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) எழுத்து தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கிறது. தமிழக அரசின் பல்வேறு வகையான பதவிகளுக்கும் தனித்தனியாக கிரேடு வாரியாக தேர்வு நடத்தப்படுகிறது. அந்த வகையில், குரூப்-4 , விஏஓ ஆகிய பணியிடங்களுக்கு தனித்தனியாக நடத்தப்பட்டு வந்த எழுத்து தேர்வை இனி ஒன்றிணைத்து நடத்த டி.என்.பி.எஸ்.சி முடிவு செய்துள்ளது.
விண்ணப்பதாரர்கள் விரும்பும் பணியினை கலந்தாய்வு மூலம் தேர்ந்தெடுத்துக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள டி.என்.பி.எஸ்.சி, தனித்தனியாக தேர்வு நடத்துவதால் ஒவ்வொரு தேர்வுக்கும் ரூ.15 கோடி செலவாகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விஏஓ தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்களில் 60 சதவீதம் பேர் குரூப்-4க்கும் விண்ணப்பிக்கின்றனர் எனவும், 10-ம் வகுப்பு கல்வித் தகுதியில் பணியிடங்களை நிரப்புவதால், இரு தேர்வுகளும் இனி ஒன்றாகவே நடத்தப்படும் என்று தெரிவித்துள்ள டி.என்.பி.எஸ்.சி, CCSE-IV என்ற பெயரில் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Next Story
×