search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்சியில் அனுமதியில்லாமல் பேனர்கள்: மாலைக்குள் தகவல் தெரிவிக்க ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
    X

    திருச்சியில் அனுமதியில்லாமல் பேனர்கள்: மாலைக்குள் தகவல் தெரிவிக்க ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

    திருச்சியில் இன்று நடைபெற உள்ள எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்காக பேனர்கள் சட்ட விரோதமாக வைக்கப்பட்டுள்ளன. இது குறித்து மாலைக்குள் தகவல் தெரிவிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    திருச்சியில் இன்று நடை பெற உள்ள எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்காக நூற்றுக்கணக்கான பேனர்கள் சட்ட விரோதமாக வைக்கப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. இந்த பேனர்களை அகற்ற வேண்டும் என்று தமிழக தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், திருச்சி போலீஸ் கமி‌ஷனர், கலெக்டர் ஆகியோரிடம் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஐகோர்ட்டில் டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந் திருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எம்.சுந்தர் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், ‘முறையான அனுமதி பெற்ற பின்னரே அனைத்து பேனர்களும் வைக்கப்பட்டுள்ளன. இதில் விதிமீறல் இல்லை’ என்று வாதிட்டார்.

    அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘தங்களது இந்த கருத்தை உத்தரவாதமாக பதிவு செய்து கொள்ளலாமா?’ என்று கேள்வி எழுப்பினார்கள்.

    அதற்கு அட்வகேட் ஜெனரல், ‘திருச்சியில் நிலவும் நிலவரத்தை அதிகாரிகளிடம் கேட்டு தெரிவிக்க ஒருநாள் அவகாசம் வேண்டும்’ என்றார். இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், ‘திருச்சியில் இன்று நிகழ்ச்சி நடைபெறுகிறது. எனவே பேனர்கள் குறித்து தகவல் தெரிவிக்க ஒருநாள் காலஅவகாசம் வழங்க முடியாது.

    எனவே, திருச்சியில் மொத்தம் எத்தனை பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன? அதில் எத்தனை அனுமதி பெற்று வைக்கப்பட்டுள்ளன? எத்தனை அனுமதியில்லாமல் வைக்கப்பட்டுள்ளன? என்ற விவரங்களை இன்று மாலை 4.30 மணிக்குள் எங்களுக்கு தெரிவிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனர். விசாரணையை இன்று மாலைக்கு தள்ளிவைத்தனர்.
    Next Story
    ×