search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் ஆய்வு
    X

    பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் ஆய்வு

    பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி திடீர் ஆய்வு செய்தார். அப்போது சிகிச்சை முறைகள் குறித்து நோயாளிகளிடம் கேட்டறிந்தார்.

    பொன்னேரி:

    திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிக அளவு உள்ளது. காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் முழு வீச்சில் நடவடிக்கை எடுத்து வருகிறது.

    பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 38 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். தினந்தோறும் காய்ச்சல் பாதித்த 500-க்கும் மேற்பட்டோர் வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற்றுசெல்கிறார்கள்.

    இங்கு போதிய சிகிச்சை அளிக்க டாக்டர்கள் இல்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள். இந்த நிலையில் பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி திடீர் ஆய்வு செய்தார். அப்போது சிகிச்சை முறைகள் குறித்து நோயாளிகளிடம் கேட்டறிந்தார்.

    பொதுமக்கள் சுற்றுபுறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளவேண்டும். வீட்டின் அருகில் உள்ள காலி மனைகளில் தண்ணீர் தேங்கி நிற்காமல் பார்த்து கொள்ள வேண்டும்.


    காய்ச்சல் பாதிப்பு உள்ள கிராமங்களில் சுகாதார பணிகள் மேற்கொள்ளப்படும். போலி டாக்டர்கள் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது. இதுபற்றி தொடர்ந்து புகார்கள் வருகின்றன. போலி டாக்டர்கள் குறித்து 1077 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதைத்தொடர்ந்து கலெக்டர் சுந்தரவல்லி மீஞ்சூர் பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்ய சென்றார்.

    அப்போது தடப்பெரும்பாக்கம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள், கலெக்டரிடம், “கழிவுநீர் அனைத்தும் மழைநீர் கால்வாயில் விடப்படுவதால் அடைப்பு ஏற்பட்டு தெருக்களில் தண்ணீர் தேங்கி சுகாதார கேடு ஏற்பட்டு உள்ளது. இது பற்றி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

    Next Story
    ×