search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெங்கு கொசுவை ஒழிக்க ஊட்டிக்கு வரும் வாகனங்களில் தடுப்பு மருந்து தெளிப்பு
    X

    டெங்கு கொசுவை ஒழிக்க ஊட்டிக்கு வரும் வாகனங்களில் தடுப்பு மருந்து தெளிப்பு

    டெங்கு கொசுவை ஒழிக்க ஊட்டிக்கு வரும் வாகனங்களில் தடுப்பு மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. பொள்ளாச்சியில் 5 திருமண மண்டபங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    ஊட்டி:

    தமிழகம் முழுவதும் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இதற்கு பலர் பலியாகி உள்ளனர். கோவை, திருப்பூர் மாவட்டங்களிலும் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலுக்கு பலர் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    ஆணால் மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு எதுவும் இல்லை. இங்கு குளிர் அதிகமாக இருப்பதால் டெங்கு கொசு உருவாக வாய்ப்பு இல்லை என சுகாதாரத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

    ஆனால் இந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள் வேலைக்காகவும், படிப்புக்காகவும் வெளியூர்களுக்கு சென்று வருகிறார்கள். அங்கு அவர்களுக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டு ஊருக்கு வரும் போது காய்ச்சல் ஏற்படுகிறது.

    அப்படி வந்தவர்களில் 500 பேருக்கும் மேல் ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் ரத்த பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. அவர்களுக்கு டெங்கு பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறார்கள்.

    நீலகிரி மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு இல்லை என்றாலும் மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. டெங்கு கொசுக்கள் உருவாகாமல் தடுக்க கொசு மருந்து தெளித்தல், சாக்கடை கால்வாய் சுத்தம் செய்தல், தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளுதல் போன்ற நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

    மேலும் வெளி மாவட்டங்களில் இருந்து நீலகிரி வரும் வாகனங்களுக்கு தடுப்பு மருந்து தெளிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

    மாவட்ட எல்லை சோதனை சாவடிகளான குஞ்சப்பனை மற்றும் நாடுகாணியில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக வாகனங்களுக்கு கொசு மருந்து அடிக்கப்படுகிறது.

    ஊட்டி, கேத்தி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் சுகாதார பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


    தமிழகத்தில் டெங்கு கொசுபுழு உருவாக காரணமாக உள்ள தனியார் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமாக இருந்த 5 திருமண மண்டப உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    பொள்ளாச்சி நகராட்சி நகர் நல அலுவலர் ராஜ்குமார் தலைமையில் நகராட்சி ஊழியர்கள் பல்லடம் ரோடு, புதிய திட்ட சாலை ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள இந்த திருமண மண்டபங்களில் ஆய்வு நடத்தி அபராதம் விதித்தனர்.

    பொள்ளாச்சியில் 6 வீடுகளில் டெங்கு கொசு புழுக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு ரூ. 2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    திருவள்ளூவர் நகரில் ஒரு டயர் கடையில் கொசுப் புழுக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்படடு கடை உரிமையாளருக்கு ரூ 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    Next Story
    ×