search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 குறைந்தது
    X

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 குறைந்தது

    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 குறைந்து, ஒரு சவரன் ரூ.22,496-க்கு விற்பனையாகிறது.
    சென்னை:

    தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. கடந்த 14-ந்தேதி ஒரு பவுன் ரூ.22 ஆயிரத்து 800-க்கு விற்கிறது. பின்னர் படிப்படியாக குறைந்து 19-ந் தேதி பவுன் ரூ.22 ஆயிரத்து 600 ஆக இருந்தது.

    பின்னர் விலை உயர்ந்து நேற்று பவுன் ரூ.22 ஆயிரத்து 640-க்கு விற்றது. இன்று பவுனுக்கு ரூ.144 குறைந்துள்ளது. ஒரு பவுன் ரூ.22 ஆயிரத்து 496 ஆக உள்ளது. கிராமுக்கு ரூ.18 குறைந்து ரூ.2,812-க்கு விற்கிறது.

    அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு உயர்வு மற்றும் பங்கு சந்தையின் மீதான முதலீடு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.100 குறைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.42 ஆயிரத்து 800 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.42.80-க்கு விற்கிறது.
    Next Story
    ×