search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இணையதளத்தில் படம் பார்ப்பதா? எச்.ராஜா மன்னிப்பு கேட்க விஷால் கோரிக்கை
    X

    இணையதளத்தில் படம் பார்ப்பதா? எச்.ராஜா மன்னிப்பு கேட்க விஷால் கோரிக்கை

    மெர்சல் திரைப்படத்தை இணையதளத்தில் பார்த்ததாக எச்.ராஜா கூறியதை அடுத்து அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என நடிகர் விஷால் கோரிக்கை விடுத்துள்ளார்.
    சென்னை:

    விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான மெர்சல் திரைப்படத்தில் மத்திய அரசின் பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி.யால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தான வசனங்கள் இடம் பெற்றிருந்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழக பா.ஜ.க மேற்கண்ட காட்சிகளை படத்திலிருந்து நீக்க வேண்டும் என போர்க்கொடி தூக்கியது.

    இதனையடுத்து, மெர்சல் திரைப்படத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, ப.சிதம்பரம் உள்ளிடோர் ஆதரவாக கருத்து தெரிவித்தனர். இதனால், மெர்சல் விவகாரம் தேசிய அளவில் ட்ரெண்டிங் அடித்து வருகிறது.

    மேலும், தமிழ் திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலர் மெர்சலுக்கு ஆதரவாக தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பா.ஜ.க தேசிய தலைவர் எச்.ராஜா மெர்சல் திரைப்பட காட்சிகளை இணையதளத்தில் பார்த்ததாக பேசியிருந்தார்.

    இந்நிலையில், மெர்சல் திரைப்படத்தை இணையதளத்தில் பார்த்ததாக எச்.ராஜா பேசியிருப்பது வேதனை அளிக்கிறது. பைரசி எனப்படும் திருட்டுக்குற்றத்தை சட்டபூர்வமாக அரசுகள் ஆக்கிவிட்டதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இதற்காக அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என விஷால் வலியுறுத்தியுள்ளார்.
    Next Story
    ×