search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குமரி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு மேலும் ஒருவர் பலி
    X

    குமரி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு மேலும் ஒருவர் பலி

    குமரி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு மேலும் ஒரு தொழிலாளி பலியாகி உள்ளது பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

    அருமனை, அக்.21-

    குமரி மாவட்டம் அருமனை அருகே மேல் பாலை தட்டாங்கோணம் பகுதியை சேர்ந்தவர் எட்வின் ஏஞ்சல்ராஜ் (வயது 40). இவருக்கு கடந்த 4 நாட் களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டது.

    அவரை ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி எட்வின் ஏஞ்சல்ராஜ் இறந்தார். இவர் டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரண மாக இறந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு வடிவீஸ்வரத்தை சேர்ந்த பூசாரி கண்ணன், தக்கலை அருகே சாரோடு பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி மகரிஷா டெங்கு காய்ச்சலால் பாதிக் கப்பட்டு உயிர் இழந்தனர்.

    இந்த நிலையில் மேலும் ஒரு தொழிலாளி டெங்கு காய்ச்சலால் பலியாகி உள்ளது பீதியை ஏற்படுத்தி இருக்கிறது.

    இதற்கிடையே ஆசாரிப் பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 7 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களில் 2 பேர் ஆண்கள், 2 பெண்கள், 3 ஆண் குழந்தைகள் ஆவார்.

    மேலும் எலி காய்ச்சல் அறிகுறியுடன் ஒருவர் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    தக்கலை அரசு ஆஸ்பத்திரி யிலும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    Next Story
    ×