search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாட்டி வைத்தியம் போதாது: நிலவேம்பு கசாயம் குடிக்கும் அளவை தெளிவுபடுத்த வேண்டும்- ஜி.கே.வாசன்
    X

    பாட்டி வைத்தியம் போதாது: நிலவேம்பு கசாயம் குடிக்கும் அளவை தெளிவுபடுத்த வேண்டும்- ஜி.கே.வாசன்

    பாட்டி வைத்தியம் போதாது, நிலவேம்பு கசாயம் குடிக்கும் அளவை தெளிவுபடுத்த வேண்டும் என த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
    அம்பத்தூர்:

    வில்லிவாக்கத்தில் உள்ள தாமோதர பெருமாள் கோவிலில் மூப்பனார் விளையாட்டு அகாடமி சார்பில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் இன்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை. போர்க்கால அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுத்து காய்ச்சலை கட்டுப்படுத்த வேண்டும். மேலும் டெங்கு காய்ச்சல் குறித்து பொதுமக்களுக்கு விழிப் புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

    நிலவேம்பு கசாயத்தை நம்பியே அரசு உள்ளது. பாட்டி வைத்தியத்தை மட்டும் நம்பாமல் நவீன மருத்துவம் மூலம் டெங்குவை கட்டுப்படுத்த வேண்டும். 15 நாட்களில் டெங்குவை கட்டுப்படுத்துவோம் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகிறார். ஆனால் தினந்தோறும் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சாகும்.

    பல்வேறு இடங்களில் தொடர்ந்து நிலவேம்பு கசாயம் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. நிலவேம்பு கசாயத்தை எந்த அளவு குடிக்க வேண்டும் என்பதை அரசு முழுமையாக தெளிவுபடுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது நிர்வாகிகள் கொட்டிவாக்கம் முருகன், ஜவகர்பாபு, ரவிச்சந்திரன், பிரபாகர் ஆகியோர் உடன் இருந்தனர்.
    Next Story
    ×